Search This Blog

Thursday, 1 February 2018

வருமான வரிக்கான உச்ச வரம்பில் மாற்றம் இல்லை.. மாத சம்பளதாரர்கள் பெரும் ஏமாற்றம்

Updated: Thu, Feb 1, 2018, 13:06 [IST]
மத்திய பட்ஜெட் 2018-2019
டெல்லி: வருமான வரிக்கான உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு வரி செலுத்துவோரிடையே ஏற்பட்டுள்ளது.
இன்று நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டுக்கான (2018-2019) பொது பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.
மோடி அரசு பொறுப்பேற்று தாக்கல் செய்யவுள்ள கடைசி முழு பட்ஜெட்டாக பார்க்கப்படுகிறது. இதில் ஏராளமான எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. மேலும் மற்ற மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களையும், அடுத்து நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலையும் கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் மக்களை கவரும் வகையில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

வருமான வரிக்கான உச்சவரம்பு

இந்த முறை இரண்டாவது முறையாக ரயில்வே பட்ஜெட்டுடன் சேர்த்து பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் வருமான வரி செலுத்துவதற்கான உச்ச வரம்பு ரூ. 2.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

பயனடைய வாய்ப்பு

தற்போது உள்ள வரம்பில் ஒருவரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 51 ஆயிரம் என்றாலும் அந்த ஆயிரத்துக்கான வரியை செலுத்தியே தீர வேண்டும். ஒரு வேளை உச்ச வரம்பு ரூ. 3 லட்சமாக உயர்ந்தால் ஏராளமானோர் பயனடைய வாய்ப்பாக அமையும் என்பதால் எதிர்பார்ப்பு நிலவியது.

No comments:

Post a Comment