அரசுப் பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் அறிவிப்பு
அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்குகின்றன.
இப்பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில், அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது அதன்படி, பட்டதாரி ஆசிரியர் பதவியில் மட்டும் 2,223 காலியிடங்கள் உள்ளன.
பாடப்பிரிவு வாரியாக காலியிடங்கள் விவரம் வருமாறு:
தமிழ்-299
ஆங்கிலம் - 237
கணிதம்- 468
அறிவியல் - 731
சமூக அறிவியல் - 488.
ஆசிரியர் பணி நியமனத்தைப் பொறுத்தவரையில், 50 % நேரடி நியமன முறையிலும், 50 %பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.
பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறுகிறது. வெயிட்டேஜ் முறையில், தகுதித்தேர்வு தேர்ச்சிக்கு 60 சதவீதமும், பிளஸ் 2, பட்டப் படிப்பு, பிஎட். மதிப்பெண்-க்கு 40 சதவீதமும் வெயிட்டேஜ் அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment