Search This Blog

Thursday, 1 February 2018

பட்ஜெட் 2018: இனி அலுவலகங்களுக்கும் அடையாள அட்டை.. ஆதார் கார்ட் போலவே புதிய திட்டம்!

டெல்லி: ஆதார் கார்ட் போலவே இனி அலுவலகங்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

2018-2019-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தற்போது தாக்கல் செய்யப்படுகிறது. இது நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தையை கடைசி முழு பட்ஜெட் ஆகும்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இதில் வெளியாகி இருக்கிறது.
அதன்படி ஆதார் கார்ட் போலவே இனி அலுவலகங்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இது அலுவலங்களை பிரித்து பார்க்கவும் அடையாளம் காணவும் உதவும் எனப்பட்டுள்ளது.

இந்த அட்டை எப்படி வழங்கப்படும் என்று கூறப்படவில்லை. மேலும் என்ன மாதிரியான நிறுவனங்கள் இதற்குள் வரும் என்றும் கூறப்படவில்லை.

No comments:

Post a Comment