Search This Blog

Monday, 15 January 2018

ஏர்ஏசியா வழங்கும் அதிரடி ஆஃபர்.. இந்தியாவின் இந்த 7 நகரங்களுக்கும் ரூ. 99-ல் பறக்கலாம்..!

இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் விமானப் போக்குவரத்து சேவை அளித்து வரும் ஏர்ஏசியா நிறுவனம் குறிப்பிட்ட சில வழித்தடங்களுக்கு மட்டும் 99 ரூபாய் விமான டிக்கெட் என அறிவித்துள்ளது.
இந்தச் சலுகை விலை விமானப் பயணமானது திங்கட்கிழமை முதல் 7 நகரங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

7 நகரங்கள்
ஏர் ஏசியாவின் 99 ரூபாய் அடிப்படை கட்டண ஆஃபரில் பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா, டெல்லி, புனே மற்றும் ராஞ்சி வழித்தடங்களில் பயணம் செய்யலாம்.
வெளிநாட்டு வழித்தடங்கள்
இந்திய ஏர் ஏசியாவின் தாய் நிறுவனத்தின் மூலம் ஆக்லாந்து, பாலி, பாங்கொக், கோலாலம்பூர், மெல்போர்ன், சிங்கப்பூர் மற்றும் சிட்னி உட்பட 10 ஆசிய பெசிபிக் வழித்தடங்களில் 1,499 ரூபாய் அடிப்படை கட்டணத்தில் விமானப் பயணம் செய்ய முடியும்.

சலுகை நாட்கள்
ஜனவரி 15 முதல் ஜூலை 31 வரையிலான விமானப் பயணங்களுக்கு இந்த அடிப்படை கட்டண சலுகை விலையில் ஜனவரி 21-ம் தேதிக்குள் டிக்கெட் புக் செய்து பயணம் செய்ய முடியும்.

பிற கிளைகள்
ஏர் ஏசியா இந்தியா மட்டும் இல்லாமல் ஏர்ஏசியா பெர்ஹாத், தாய் ஏர்ஏசியா, ஏர்ஏசியா எக்ஸ் மற்றும் இந்தோனேசியா ஏர்ஏசியா எக்ஸ் உள்ளிட்ட கிளைகளும் சலுகைகளை வழங்கியுள்ளன.
டிக்கெட் எங்குக் கிடைக்கும்
ஏர் ஏசியாவின் இந்தச் சலுகை விலை டிக்கெட் airasia.com மற்றும் ஏர் ஏசியா மொபைல் ஆப் உள்ளிட்டவையில் மட்டுமே கிடைக்கும்.

ஏர்ஏசியா இந்தியா
ஏர்ஏசியா இந்தியாவானது புவனேஷவர், சண்டிகர், ஹைதராபாத், கவுகாத்தி, பாஞ்சி, இம்பால், ஜெய்ப்பூர், கொச்சி மற்றும் விஷாகபட்டிணம் உட்பட 16 இந்திய நகரங்களுக்கு விமானப் போக்குவரத்துச் சேவையினை அளிக்கிறது.

No comments:

Post a Comment