இந்திய ராணுவ தினம் இன்று (ஜன.,15) கொண்டாடப்படுவதை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் கர்நாடக மக்களுக்கு அவர் தனது சங்கராந்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
வீரர்களுக்கு வாழ்த்து :
மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய ராணுவ தினத்தில், ராணுவ வீரர்கள், முன்னாள் வீரர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டை காப்பதுடன், இயற்கை பேரிடர் மற்றும் விபத்துக்களின் போதும் மனிதநேயத்துடன் போராடுவதால் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் நமது ராணுவத்தின் மீது நம்பிக்கையும், பெருமையும் கொண்டுள்ளான்.
நமது ராணுவம் எப்போதும் நமது நாட்டை முதன்மைப்படுத்துகிறது. நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரர்களையும் வணங்குகிறேன். இத்தகைய மதிப்பு மிக்க ஹீரோக்களை இந்தியா ஒருபோதும் மறவாது.
சங்கராந்தி வாழ்த்து :
கர்நாடகாவில் வாழும் ஒவ்வொரு சகோதர, சகோதரிக்கும் எனது சங்கராந்தி வாழ்த்துக்கள். மகர சங்கராந்தி விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. கடினமாக உழைக்கும் விவசாயிகளை வணங்குவோம். அவர்கள் வளமுடன் வாழ பிரார்த்தனை செய்வோம் என தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment