Search This Blog

Monday, 15 January 2018

செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்!

செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் குறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அமெரிக்காவின் யு.எஸ்.ஜி.எஸ் புவி ஆய்வு கலன் செய்த ஆய்வின் மூலம் ஆய்வாளர் கலின் துண்டாஸ் இதைக் கண்டறிந்துள்ளார்.


சமீபத்தில் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களின் மூலம் இது தெரியவந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்டுள்ள மண் அரிமான புகைப்படங்களை வைத்து, அங்கு நீர் ஓட்டம் இருக்கும் பனிச்சுனைகளின் அடுக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.
செவ்வாய் கிரகத்தின் எட்டுப்பகுதிகளில் இதுபோன்ற பனிச்சுனை அடுக்குகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்புகள் செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சியிலும், மனிதர்கள் மாற்று கிரகங்களில் வாழ்வது குறித்தான ஆராய்ச்சியிலும் மிக முக்கியமான முன்னேற்றப்புள்ளியாக கருதப்படுகிறது

No comments:

Post a Comment