Search This Blog

Monday, 15 January 2018

சீனாவுடன் கைகோர்த்த நேபாளம்; அதிர்ச்சியில் இந்தியா

இந்தியாவில் இருந்து பெறப்படும் இணையச் சேவை மிக மோசமாக இருப்பதால் நேபாளம் சீன டெலிகாம் குளோபல் உடன் இணைந்துள்ளது.
நேபாளத்தின் அரசு நிறுவனமாக நேபாள் டெலிகாம் நிறுவனம் இந்திய டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் டாடா கம்யூனிகேஷன் நிறுவனங்களுடன் இணைந்து இணையச் சேவையை பெற்று வருகிறது. இந்த இணையச் சேவை மிக மோசமாகவும், அடிக்கடி துண்டிக்கப்பட்டு வந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் 10 ஆண்டுகளாக பெற்று வந்த சேவையை, நேபாளம் நிறுத்திக் கொண்டது. தற்போது சீன டெலிகாம் குளோபல் உடன் இணைந்துள்ளது. இதனால் தடையில்லா இணையச் சேவையை பெற முடியும் என்று நேபாள் டெலிகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment