Search This Blog

Tuesday, 16 January 2018

ஜிமிக்கி கம்மல் புகழ் ஆசிரியை ஷெரிலின் மற்றுமோர் நடனம் - வீடியோ

'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் பாடல் கேரளாவின் ஓணம் கொண்டாட்ட பாடலாகவே மாறியது. குறிப்பாக அந்தப்பாடலுக்கு ஷெரில் என்பவர் தனது நடனக்குழுவினருடன் நடனமாடி பாடல் உலகம் முழுவதும் பயங்கர வைரலானது. தற்போது, 'ஜிமிக்கி கம்மல்' ஷெரில் இன்னொரு மலையாள பாடலுக்கு ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது. ஆசிரியை ஷெரில் தனது நடனக்குழுவினருடன் நடனமாடி பாடல் உலகம் முழுவதும் பயங்கர வைரலானது. அவரைத் தொடர்ந்து பலரும் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடி வீடியோக்களை வெளியிட்டனர். படத்தின் இடம்பெற்ற ஒரிஜினல் பாடலுக்கே ஷெரில் ஆடிய வெர்ஷன் விளம்பரத்தைத் தேடித் தந்தது. கேரள ரசிகர்கள் பலர் இந்தப் பாடலுக்காகவே படத்தைப் பார்த்ததாகவும் அப்போது கூறியிருந்தனர். அதனால் கேரளாவையும் தாண்டி, தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல மாநிலங்களை ஆக்கிரமித்து, பல நாடுகளிலும் அந்தப்பாடல் வைரலாக மாறியது. இந்நிலையில், தற்போது ஷெரில் இன்னொரு பாடலுக்கு ஆடிய வீடியோவும் வைரலாகி வருகிறது. மலையாள நடிகர் ஜெயசூர்யா, டப்ஷ்மாஷ் புகழ் சௌபாக்யா ஆகியோரோடு 'ஜிமிக்கி கம்மல்' ஷெரில் கலந்துகொண்ட பத்திரிகை நிகழ்ச்சி ஒன்றில் தான் டான்ஸ் ஆடி கலக்கியிருக்கிறார் ஷெரில். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ காண :

https://youtu.be/0udiO4Oy_S8

No comments:

Post a Comment