Search This Blog

Monday, 5 February 2018

மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்திற்கு திருஷ்டி சுற்றியது தான் காரணமா?

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்திற்கு திருஷ்டி சுற்றியது தான் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ பிடித்த சம்பவத்தில் கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் சம்பவம் நடந்த இடத்தில் கடை நடத்தி வரும் முருக பாண்டி என்பவர் கடையை பூட்டிவிட்டு திருஷ்டி சுற்றிய காட்சிகள் பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில் போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்திற்கு திருஷ்டி சுற்றியது தான் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அனைத்து கடைக்காரர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment