Search This Blog

Monday, 5 February 2018

இந்தியாவில் 64% அனுமதி பெறாத ஆன்டிபயாடிக் மாத்திரைகள்

பன்னாட்டு நிறுவனங்கள் பல தொடர்ந்து அனுமதி பெறாமல் இந்தியாவில் ஆன்டிபயாடிக்கள் விற்கப்படுவதாக, ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

லண்டன் க்யூன்மேரி பல்கலை.,யும் நியூகாஸ்டல் பல்கலை.,யும் இணைந்து நடத்திய ஆய்வில், இந்திய சந்தையில் விற்கப்படும் லட்சக்கணக்கான ஆன்டிபயாடிக் மாத்திரைகள் முறைப்படுத்தப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007 ம் ஆண்டு முதல் 2012 வரை இந்தியாவில் விற்கப்பட்ட ஆன்டிபயாடிக்களில் 64 சதவீதம், மத்திய மருந்து தர கட்டுப்பாடு அமைப்பின் அனுமதியை பெறவில்லை. இந்தியாவில் அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக பல புதிய மருந்துகள் விற்பனையும், விநியோகமும் செய்யப்படுகின்றன.
அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் வெறும் 4 சதவீத மருந்துகள் மட்டுமே இவ்வாறு அனமதியின்றி விற்கப்படுகின்றன.

ஆன்டிபயாடிக்களை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் ஏற்கனவே இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் தற்போது சட்ட விரோதமாக ஆன்டிபயாடிக்கள் விற்பனையிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்த அனுமதி பெறாத ஆன்டிபயாடிக்கள் 500 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மூலம் 3300 பிராண்ட் பெயர்களில் விற்கப்படுகிறது. இவற்றில் 12 பன்னாட்டு நிறுவனங்கள் ஆகும்.

No comments:

Post a Comment