மதுரை : எல்லாவற்றுக்கும் முக்கியமாக இருப்பது பணமே. பணம் இருப்பவர்களே முன் நிறுத்தப்படுகிறார்கள், பணமே எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிறது என்று மருத்துவக் கல்வி இயக்குனர் நியமன வழக்கில் நீதிபதிகள் கருத்து கூறி இருக்கின்றனர்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த டாக்டர் எட்வின் ஜோ 2017ம் ஆண்டு ஏப்ரலில் தமிழக மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தை எதிர்த்து கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி கயிலைராஜன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவின் அடிப்படையில் டாக்டர் எட்வின் ஜோ நியமனத்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்து உத்தரவிட்டது. எட்வின் ஜோ நியமன ரத்தை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. 2 நீதிபதிகள் அமர்வு எட்வின் ஜோவின் நியமனம் தொடர்பான அரசாணையை ரத்து செய்ததோடு தனி நீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்தனர். அந்தப் பதவிக்கு பொறுத்தமான நபரை நியமிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற அவமதிப்பு மனு
ஆனால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத சுகாதாரத்துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க டாக்டர் ரேவதி மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். இது குறித்து விளக்கமளிக்குமாறு நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரருக்கு பல்வேறு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
அரசு பதிலால் நீதிபதிகள் அதிருப்தி
இறுதியாக இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநராக எட்வின்ஜோ மீண்டும் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது. இந்த பதிலை கேட்டு நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர்.
எந்த அடிப்படையில் மீண்டும்?
எதன் அப்படையில் மருத்துவக் கல்வி இயக்குநராக எட்வின் ஜோ மீண்டும் நியமிக்ப்பட்டுள்ளார் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்கு 9 அம்சங்கள் சாதகமாக இருந்ததாக அரசு பதில் அளித்துள்ளது. எட்வின் ஜோவிற்கு ஆதரவாக 9 அம்சங்கள் இருந்த நிலையில் ரேவதிக்கு ஆதரவாக ஒரு அம்சம்கூட இல்லையா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பணமே பிரதானம்
இறுதியாக இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள் எல்லாவற்றுக்குமே பிரதானமாக இருப்பது பணம் தான். பணம் இருப்பவர்களே முன் நிறுத்தப்படுகிறார்கள், பணமே எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கிறது என்று தெரிவித்தனர்.

No comments:
Post a Comment