Search This Blog

Wednesday, 17 January 2018

புதுக்கோட்டையில் இட்லி சாப்பிடும் போட்டியில் கூலித் தொழிலாளி பலி

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கியில் இட்லி சாப்பிடும் போட்டியில் கூலித் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி ஆங்காங்கே ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு அவற்றில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் இட்லி சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது. அதில் கூலி தொழிலாளி சின்னதம்பி கலந்து கொண்டார்.
போட்டி தொடங்கியதும் போட்டியாளர்கள் வேகமாக இட்லிகளை உண்ணத் தொடங்கினர். அதை பார்த்ததும் சின்னதம்பியும் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இட்லிகளை சாப்பிட்டார்.

அப்போது இட்லி அவரது தொண்டையில் சிக்கியதில் மூச்சு திணறிய சின்னதம்பி சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். இதனால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.

No comments:

Post a Comment