Search This Blog

Wednesday, 17 January 2018

அரசியலாக்கப்படும் ஹஜ் மானிய ரத்து

புதுடில்லி : ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் மானிய தொகை இந்த ஆண்டு முதல் நிறுத்தப்படுவதாகவும், அந்த தொகை சிறுபான்மையினர் கல்விக்காக பயன்படுத்தப்பட உள்ளதாகவும் மத்திய அரசு நேற்று அறிவித்தது.

இதற்கு பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறுகையில், மத்திய அரசு தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கை கையாண்டு வருகிறது. ஹஜ் பயணத்திற்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்ததை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இந்த முடிவிற்கு கண்டனம் தெரிவித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஹஜ் மானியத்தை மீண்டும் வழங்குவது தொடர்பாக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அனைத்து மதத்தினருக்கும் பொதுவானதாக அரசு செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.ஹஜ் மானிய ரத்துக்கு தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இந்த முடிவிற்கு சிறு சிறு கட்சிகள் எதிர்ப்புக்களை பதிவு செய்து வரும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான காங்., எதிர்ப்பை தெரிவிக்காமல் அமைதி காக்கிறது. மத்திய அரசு இந்த தொகையை சிறுபான்மையினரின் வளர்ச்சிக்காக பயன்படுத்தும் என நம்புவதாக மட்டும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஹஜ் மானியம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் குறித்து மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கருத்து தெரிவித்துள்ளார் . அவர் கூறுகையில், ஏறக்குறைய அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களும் அரசின் இந்த முடிவை வரவேற்கின்றன. மோடி அரசு என்ன செய்தாலும் அதை விமர்சிக்க வேண்டும் என்ற பழக்கமுடைய சிலர் மட்டும் இதனை எதிர்க்கின்றனர். அரசின் இந்த முடிவால் அவர்களுக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது. மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment