Search This Blog

Sunday, 31 December 2017

"நான் அரசியலுக்கு வருவது உறுதி... காலத்தின் கட்டாயம்" : நடிகர் ரஜினிகாந்த்

"நான் அரசியலுக்கு வருவது உறுதி... காலத்தின் கட்டாயம்" : நடிகர் ரஜினிகாந்த்

நான் அரசியலுக்கு வருவது உறுதி. அது காலத்தின் கட்டாயம் என்று இன்று ரசிகர்கள் மத்தியில் அறிவித்தார் ரஜினிகாந்த்.
தான் தனி கட்சி தொடங்கபோவாதாகவும், அனைத்து தொகுதிகளிலும் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டி இடுவோம் என்றார் அவர். அதற்கு முன்பு வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்ற அவர், பாராளுமன்றத்தில் போட்டி இடுவது குறித்து தேர்தல் சமயத்தில் அறிவிப்பேன் என்றார்.
எனக்கு பணம் புகழ் வேண்டாம். எனக்கு தேவையான அளவுக்கு நீங்கள் (ரசிகர்கள்) அளித்துவிட்டீர்கள் என்று கூறிய அவர், என்னைத் தேடி 1996- ஆம் ஆண்டே பதவி வந்தது, அப்போது பதவிக்காக ஆசைப்படாத நான் இப்போதா ஆசைப்படப் போகிறேன் என்றார்.
சீர்கெட்ட ஜனநாயகம்:
மேலும் அவர், "ஜனநாயம் சீர்கெட்டுவிட்டது. கடந்த ஓராண்டாக தமிழகத்தில் நடந்த சம்பவங்கள் தமிழர்கள் எல்லோரையும் தலைகுனிய வைத்துவிட்டது. மற்ற மாநிலத்தினர் நம்மை இழிவாக பார்க்கிறார்கள்.
அரசியல் என்பது சாதாரண விஷயம் அல்ல. நடுகடலில் இறங்கி முத்தெடுப்பது போல. ஆண்டவனின் அருளும், மக்களின் செல்வாக்கும் கண்டிப்பாக எனக்கு உள்ளது."
பழைய காலத்தில் ராஜாக்கள் வேறு நாடுகளுக்கு சென்று கொள்ளையடிப்பார்கள் ஆனால், இப்போது அரசியல்வாதிகள் சொந்த நாட்டிலேயே கொள்ளை அடிக்கின்றனர் என்றார்.
காவலர்கள் வேண்டும்:
எனக்கு தொண்டர்கள் வேண்டாம். எனக்கு காவலர்கள் வேண்டும். பொதுநலனுக்கு இல்லாமல் சுயநலத்திற்கு போய் நிற்காத காவலர்கள் வேண்டும். தவறை தட்டிக் கேட்கும் காவலர்கள் வேண்டும். இந்த காவலர்களின் பிரதிநிதி நான் என்றார்.
உலகம் முழுவதும் 50,000 பதிவு பெற்ற ரஜினி ரசிகர் மன்றங்கள் உள்ளன. இந்த மன்றத்தை சேர்ந்த தனது ரசிகர்களை மண்டலவாரியாக ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பின் இறுதி நாளான இன்று தான் அரசியலுக்கு வருவாதாக அறிவித்து பல ஆண்டுகளாக தொடர்ந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்

No comments:

Post a Comment