Search This Blog

Thursday 1 March 2018

'N' எழுத்தை பயன்படுத்த சீனாவில் தடை

சீனாவில் N என்ற ஆங்கில எழுத்தை இணையதளங்களில் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அதிபர் ஷி ஜின்பிங்கை குறித்து ஆன்லைனில் விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம் மட்டுமின்றி சீன மொழியான மாண்டரின் மொழியிலும் 'N' என்ற எழுத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீன இணையதளங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் கிட்டத்தட்ட 20 வார்த்தைகள் வரை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. சீன அதிபர் ஷி ஜின்பிங் பெயரில் 'N' என்ற வார்த்தை இரண்டு முறை இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

அரசுக்கு எதிராக எந்த கருத்தும் எழக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தடை மக்களின் கருத்து சுதந்திரத்துக்கு முற்றிலும் எதிரானது என்ற கருத்துக்களும் கூறப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment