Search This Blog

Thursday 30 January 2020

Income Tax Easy Calculator



                                                            IT calculation 2019-20





                                                      IT 2019-20 click here to download   

  Or Download   here  

Monday 18 February 2019

ஏப்ரல் 1 முதல் CPS பிடித்தம் 10% லிருந்து 14% ஆக உயர்த்தப்படலாம்

2019 ஏப்ரல் 1 முதல் NPS பிடித்தம் 14%

On the government's decision in December 2018 to increase its contribution from 10 per cent to 14 per cent under the NPS for the central government employees, Contractor said it would start from April 1 and hoped the state governments would follow soon and raise their contributions. 

"It will start from April 1, 2019. When the NPS was introduced for the central government, the state governments followed. It would not be inconceivable that the state governments also increase their contribution from 10 per cent to 14 per cent," he said.
Last December, Finance Minister Arun Jaitley enhanced the government contribution to the NPS to 14 per cent of the basic salary while retaining the minimum employee contribution at 10 per cent.

Friday 1 February 2019

வருமான வரி மாற்றத்தால் மாத சம்பளதாரர்களுக்கு கிடைக்கப்போகும் நன்மையை பாருங்க!

வருமான வரி மாற்றத்தால் மாத சம்பளதாரர்களுக்கு கிடைக்கப்போகும் நன்மையை பாருங்க!

Updated: Friday, February 1, 2019, 20:00 [IST]

டெல்லி: வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால் நடுத்தரவர்க்கத்து மக்களுக்கு ரூ.7.5 லட்சம் வரையிலான வருவாய்க்கு வரி செலுத்த வேண்டியதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

இதுவரையிலான தனி நபர் வருமான வரி விதிப்பு என்பது ரூ.2.5 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய்க்கு 5 சதவீதமாக இருந்தது. ஆனால், மத்திய நிதியமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயல் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், இந்த வருவாய் பிரிவை நீக்குவதாக அறிவித்தார்.

அதன்படி, இனிமேல் ஆண்டு வருவாய் ரூ.5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே வருமான வரி வசூலிக்கப்படும். ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய் மீது 20 சதவீத வரி விதிக்கப்படும்.

சலுகைகள்

ஆனால் இதிலும் சலுகைகள் உள்ளன. அதாவது, 5 லட்சத்துக்கும் மேல் வருமானம் ஈட்டுவோர் மேலும் சில வரி விலக்குகளை பெற முடியும். இந்த வரி விலக்குகளை அவர்கள் முழுமையாக பெற்றால் ரூ.7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு அவர்கள் வரி கட்ட தேவையிருக்காது.

சேமிப்பு வரி விலக்கு

வருமான வரித்துறை சட்டப்பிரிவு 80சி-ன்கீழ், அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை விலக்கு பெற முடியும். இதில் பெண் குழந்தைகளுக்கான சுகன்ய சம்ரிதி/செல்வமகள் சேமிப்பு திட்டம், பல்வேறு வகையான முதலீடுகள் உள்ளிட்டவை வந்துவிடும்.

நிலையான கழிவு அதிகரிப்பு

இதுதவிர நிலையான கழிவு என்ற பெயரில் ரூ.50 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும். கடந்த வருடம்தான் நிலையான கழிவு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது ரூ.40 ஆயிரம் என அறிவிக்கப்பட்ட நிலையான கழிவு தொகை இந்த ஆண்டு ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதையும் சேர்த்தால், 7 லட்சம் ரூபாய் வரை கணக்கு காட்டி விலக்கு பெற்றுவிடலாம். இதுதவிர 80 சிசி பிரிவின்கீழ் வரும் முதலீடுகளுக்கு ரூ.2 லட்சம் வரை வரி விலக்கு உள்ளதால், அதையும் சேர்த்தால் 9 லட்சம் வரையிலான வருவாய்க்கு கணக்கு காட்டிவிடமுடியும்.
பலனளிக்கும்

ஆனால் இதில் பெரும்பாலான மாதசம்பளதாரர்கள் 7.5 லட்சம் வரை எளிதாக கணக்கு காட்டிவிட முடியும். எஞ்சிய 2 லட்சத்திற்கு கூடுதல் முதலீடுகளை செய்ய வேண்டி வரும். எப்படி இருந்தாலும், இது நடுத்தர வர்க்கத்து மாத சம்பளதாரர்களுக்கு பலனளிக்கும் அறிவிப்பாகவே பார்க்கப்படுகிறது.

இனிமேல் நீங்கள் எப்படி வரி செலுத்த வேண்டும் தெரியுமா?

வருமான வரி விலக்கு.. இனிமேல் நீங்கள் எப்படி வரி செலுத்த வேண்டும் தெரியுமா?
Updated: Friday, February 1, 2019, 20:03 [IST]

டெல்லி: இடைக்கால பட்ஜெட்டில், தனி நபர் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

இதுவரை 2.5 லட்சம் ஆண்டு வருவாய் கொண்ட தனி நபருக்கு வருமான வரி விலக்கு வழங்கப்பட்டது. 2.5-5.0 லட்சம் வரையிலான வருவாய்க்கு 5 சதவீதம், 5-10 லட்சம் ரூபாய் வரையிலான வருவாய்க்கு 20 சதவீதம், அதற்கு மேல் 30 சதவீதம் என வருமான வரி விதிக்கப்பட்டது.

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில், ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி கிடையாது என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
எனவே புதிய வரி விதிப்பு முறை எப்படி இருக்கும் என்பதை இந்த பட்டியல்கள் உங்களுக்கு புலப்படுத்தும்.

* உதாரணத்திற்கு, ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.550,000 என்று வைத்துக்கொள்வோம். அதில் நிலையான கழிவு 50,000 போய்விடும்.
எனவே அவர் ஆண்டு வருவாய் ரூ.5 லட்சம் என்று கணக்கிடப்படும். அந்த நபர் ஒரு பைசா கூட வருமான வரியாக செலுத்த வேண்டியதில்லை.

Particulars FY 2018-19   FY 2019-20 Salary + DA      377,200        377,200
 Allowances      172,800        172,800
Gross Salary     550,000        550,000
Standard Deduc 40,000          50,000
Total Income under the head 'salary'                                  510,000        500,000

Income Tax         14,500          12,500
Rebate u/s 87A            0            12,500
tax after Rebate 14,500                    0
Surcharge@10%/15% 0                    0
tax after surchar 14,500                   0
Edu Cess @ 4%          580                  0
Total tax,               15,080                  0

இப்போதுள்ள நடைமுறையை ஒப்பிட்டால், புதிய அறிவிப்பால், இந்த அளவுக்கு வருவாய் கொண்டவர்கள் ரூ.15 ஆயிரத்து 80 சேமிக்க முடியும். அதாவது வருமான வரியை மிச்சப்படுத்துவிடலாம்.
*இப்போது அடுத்த உதாரணம். ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சத்திற்கு இடையே இருப்பவர்களுக்கு 20 சதவீதம் வருமான வரி வசூலிக்கப்படுகிறது.

Particulars FY 2018-19       FY 2019-20
Salary + DA  7,77,200             7,77,200 Allowances   2,22,800             2,22,800
Gross Salary 10,00,000         10,00,000
Standard Deduc40,000             50,000
Total Income under the head 'salary'                                 9,60,000         9,50,000

Income Tax      1,04,500         1,02,500
Rebate under section 87A (deducted)
                                       0                  0   
Total tax payable after Rebate                                             1,04,500          1,02,500
Surcharge @10% / 15% 0               0

Total tax payable after surcharge                                      1,04,500           1,02,500
Edu Cess @ 4%     4,180               4,100
Total tax, surcharge and education cess                              1,08,680          1,06,600

ஒருவரின் ஆண்டு வருமானம் 10,0000 ரூபாய் என வைத்துக்கொள்வோம். அவர் நிலையான கழிவு 50,000 போக எஞ்சிய 9.5 லட்சத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும். தற்போது நிலையான கழிவு 40,000 என்ற அளவில் கணக்கிடப்படுகிறது. பியூஷ் கோயல் அதை 50,000 என்று அதிகரித்துள்ளார்.

எனவே, தற்போது 10 லட்சம் வருவாய் ஈட்டும் ஒருவர் ரூ.108,680 வரை வருமான வரி மற்றும் கல்வி செஸ் என்ற வகையில் செலுத்தி வருகிறார்கள். புதிய நிலையான கழிவு அறிவிப்பால் அந்த வருவாய் பிரிவினர் இனிமேல் 1,02500 அளவுக்கு வருமான வரி செலுத்தினால் போதும். சேமிப்பு ரூ.2,080 ஆகும்.

* ரூ.10 லட்சம் முதல் 50 லட்சத்திற்குள் ஆண்டு வருமானம் கொண்ட பிரிவை இப்போது பார்க்கலாம். ஒருவரின் ஆண்டு வருவாய் 30 லட்சம் என வைத்துக்கொள்வோம். நிலையான கழிவு ரூ.50000 கழித்து போக எஞ்சிய தொகைக்கு அவர் 7 லட்சத்து 25 ஆயிரத்து 400 வருமான வரியாக செலுத்த வேண்டி வரும். முன்பு நிலையான கழிவு 40,000 என்பதால், புதிய அறிவிப்பால் இவர்களுக்கு 3,120 மிச்சமாகும்.

இதை வைத்து பார்த்தால் 5 லட்சம் வரையிலான வருவாய் பிரிவினருக்கு இந்த பட்ஜெட் ஒரு வரப்பிரசாதம் என்பதையும், பிற வருவாய் பிரிவினருக்கு ஓரளவுக்கு மிச்சப்படுத்தும் பட்ஜெட் என்பதையும் அறியலாம்.

மாத ஊதியம் பெறுவோருக்கான இரட்டிப்பு மகிழச்சியான வருமானவரி சலுகை

தனி நபர் வருமான வரிக்கான உச்சவரம்பு 2.5 இலட்சத்திலிருந்து 5 இலட்சமாக உயர்த்தி நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட்டில் தற்போது அறிவித்துள்ளது மத்திய அரசு.

மேலும் நிலையான கழிவு (standard deduction) 40000 லிருந்து 50000 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி வட்டிக்கான உச்சவரம்பு 10000 லிருந்து 40000 ஆக உயர்த்தப்பட்டது.

Sunday 1 July 2018

new section"234F" :-Penalty on late filling of income Tax Return

Sunday, 1 July 2018
Insertion of new section"234F" :-Penalty on late filling of income Tax Return
"Section 234F'.


இன்ஜினியரிங் படிக்க வைக்க பணம் இல்லை.. விஷம் அருந்தி தந்தை பலி.. தாய்-மகள் கவலைக்கிடம்

மண்ணச்சநல்லூர்: இன்ஜினியரிங் படிக்க வைக்க பணம் இல்லாத கவலையில் தந்தை-தாய்-மகள் என குடும்பமே விஷம் அருந்தியது. இதில் தந்தை பரிதாபமாக உயிரிழந்தார். தாயும்-மகளும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
பொறியில் படிக்க பணம் இல்லாத விரக்தியில் பெற்றோருடன் மாணவி விஷம் குடித்தார். இதில் தந்தை பலியானார். தாயும், மகளுடன் தீவி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். வயது 55. இவரது மனைவி கலைவாணி. இவர்களுக்கு ஒரே மகள் காயத்ரி. இந்த ஆண்டுதான் பிளஸ் 2 முடித்தார். பிரபாகரன் தன் மகளை இன்ஜினியரிங் படிக்க வைக்க ஆசைப்பட்டார். ஆனால் குறைவான சம்பளம் காரணமாக குடும்பமே வறுமையில் தவித்து கிடந்ததால், மகளை படிக்க முடியவில்லை.
இதுகுறித்து அடிக்கடி நண்பர்களிடம் புலம்பி வந்ததுடன், மன அழுத்தத்திலும் இருந்துள்ளார். இதுபோலவே கலைவாணியும், காயத்ரியும் விரக்தியில் இருந்து வந்துள்ளனர். அதனால் 3 பேருமே தற்கொலை செய்துகொள்ளலாம் என முடிவெடுத்தனர். அதன்படி நேற்று பிற்பகல் 3 பேரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்தனர்.
நீண்ட நேரம் யாரும் வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததாலும், இரவு நேரமாகியும் வீட்டில் விளக்கு எரியாததாலும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு சந்தேகம் வலுத்தது. இதனால் கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. அதனால் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த அவர்கள் கதவை உடைத்து சென்று பார்த்தபோது, 3 பேருமே மயங்கி விழுந்திருந்தனர்.
அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் பிரபாகரன் உயிரிழந்தார். கலைவாணியும், காயத்ரியும் கவலைக்கிடமாக உள்ளனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதார் எண்ணுடன் பான் எண் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு!

ஆதார் எண்ணுடன் பான் எண் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு!


ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31, 2019 வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்கும் கடைசி தேதி நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தொடர்ந்து 4வது முறையாக இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட் செய்து மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

வரி செலுத்தும் அளவிற்கு வருவாய் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.. ஏன் தெரியுமா?



இது வருமான வரி தாக்கல் செய்யும் நேரம் என்றாலும் பலர் தனது வருவாய் வரி செலுத்தும் அளவிற்கு இல்லை என்று அதனைப் புறக்கணிப்பது வழக்கம். அதே நேரம் வருமான வரி செலுத்தும் அளவிற்கு வருவாய் வைத்துள்ள போதிலும் வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு வருமான வரித் துறை நோட்டிஸ் அனுப்பும்.
இந்தியாவில் 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற நிலை இருக்கும் போது அதனை விடக் குறைவாக உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லை என்று அதனை நிராகரிக்கின்றனர். ஆனால் வரி செலுத்தும் அளவிற்கு வருவாய் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்யும் போது அது பெரிய அளவில் பயன் அளிக்கும். அது குறித்து விளக்கமாக இங்குத் தளம் அளிக்கும் விவரங்களைப் படித்துப் பயன்பெறுக.

யாரெல்லாம் வருமான வரி செலுத்த வேண்டும்?

இந்தியாவில் தனிநபர் ஒருவரின் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் போது, இதுவே 60 வயது என்றால் 3 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் போது, 80 வயது என்றால் 5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் போது வரி தாக்கல் செய்ய வேண்டும்.

வருமான வரி செலுத்துவது அவசியமா?

மக்கள் மனதில் வரி செலுத்த கூடிய அளவிற்கு வருவாய் இல்லை என்றால் வருமான வரி தாக்கல் செய்யத் தேவையில்லை என்ற தவறான எண்ணம் உள்ளது. இந்தியாவில் இருந்துகொண்டு வெளிநாட்டில் முதலீடு செய்ய வேண்டும் அல்லது சொத்துக்கள் வாங்க வேண்டும் என்றாலும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இல்லை என்றால் வருமான வரி செலுத்த தேவையில்லை. ஆனால் வரி செலுத்தும் அளவிற்கு வருவாய் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்யும் போது பின்வரும் நன்மைகளை எல்லாம் பெறலாம்.
டாக்ஸ் ரீஃபண்டு

டாக்ஸ் ரீஃபண்டு

வங்கி கணக்கில் வைத்துள்ள பணத்திற்கு, ஃபிக்சட் டெபாசிட் போன்றவற்றில் முதலீடு செய்து இருக்கும் போது எல்லாம் வங்கி நிறுவனங்கள் டிடிஎஸ் பிடித்தம் செய்ய வாய்ப்புகள் உள்ளது. சில நிறுவனங்களில் பணிபுரியும் போது ஊழியர்கள் பெயரில் டிடிஎஸ் பிடித்தம் செய்கின்றன. இது போன்று உங்கள் பெயரில் பிடித்தம் செய்யப்பட்டுள்ள வரிப் பணத்தினை எல்லாம் நீங்கள் வருமான வரி தாக்கல் செய்வதன் மூலம் திரும்பப் பெறலாம்.
விசா

விசா

வெளிநாடுகளில் வேலை நிமித்தமாகக் குடியேற விரும்பும் போது சில நாடுகள் வருமான வரி தாக்கல் விவரங்களைச் சமர்ப்பிக்கக் கேட்கும். முக்கியமாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் செய்ய விரும்பும் போது விசா பெற வேண்டும் என்றால் வருமான வரி தாக்கல் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது ஒரு முக்கிய விதியாகவும் உள்ளது.

கடன்

கடன்

வீட்டுக் கடன், கார் கடன் அல்லது பிற கடனுக்கு விண்ணப்பிக்கும் போது கடந்த இரண்டு வருடங்களுக்கான வருமான வரி தாக்கல் செய்த விவரங்களை வங்கிகள் கட்டாயம் எனக் கூறி வருகிறன. வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்ற காரணங்களுக்காக எல்லாம் பலரின் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே வரி செலுத்தும் அளவிற்கு வரி வருவாய் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்வது பயனை அளிக்கும்.
முன்நோக்கிய மூலதன இழப்புகள்

முன்நோக்கிய மூலதன இழப்புகள்

சொந்தமாகத் தொழில் அல்லது ஈக்விட்டி முதலீடு செய்து வரும் போது கடந்த 8 வருடங்களாக நட்டம் அடைந்து வந்தாலும் வரும் காலத்தில் லாபம் பெற வாய்ப்புள்ளதால் வருமான வரி தாக்கல் செய்வது நல்லது. அதன் மூலம் அந்த நட்டத்தினை அடுத்த வருடத்திற்கு கொண்டு செல்ல உதவும்.
பிற வருவாய்கள்

பிற வருவாய்கள்

உங்கள் வருவாய் வரி செலுத்தும் அளவிற்கு இல்லை, விவசாயம் மூலம் வரும் வருவாய் என்றாலும் வரி இல்லா பத்திர திட்டங்கள் அல்லது இது போன்ற பிற திட்டங்களில் 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்து வரும் போது வருமான வரி தாக்கல் செய்வது நல்லது. இது எந்த வகையில் உங்களுக்கு வந்த வருவாய் வந்தது என காண்பிக்க ஒரு அத்தாட்சியாக இருக்கும்.

Saturday 17 March 2018

உலகின் சிக்கலான வரிமுறை இந்தியாவின் ஜி.எஸ்.டி.,

புதுடில்லி: இந்தியாவின் ஜி.எஸ்.டி., வரி, உலகின் மிகவும் சிக்கலான வரிமுறை என உலக வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக வங்கி தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஜி.எஸ்.டி., வரி முறையை பின்பற்றும் 115 நாடுகளுடன் ஒப்பிடுகையில், கூடுதல் வரிவிகிதத்துடனும், அதிக கட்டமைப்புடனும் இருப்பதால் இந்தியாவின் ஜி.எஸ்.டி., மிகவும் சிக்கலான வரிமுறையாக உள்ளது. ஜி.எஸ்.டி., வரி அதிகம் வசூல் செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. அதே சமயம் 28 சதவீத வரி என்பது, உலகளவில் 2வது அதிகபட்ச ஜி.எஸ்.டி., வரம்பாகவும் உள்ளது.
சிக்கலான இந்திய ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு முறையை ‛0% வரிவிகிதம்' ஓரளவுக்கு எளிமையாக்குகிறது. இந்திய ஜி.எஸ்.டி., விரிவிதிப்பு முறைகளில் சில மாற்றங்களை கொண்டு வந்தால், பல மாதங்களுக்கு நாட்டில் பொருளாதார மந்த நிலை உண்டாகும். இருப்பினும் அதனால் நீண்ட காலத்திற்கு பலன் கிடைக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கண் பார்வையில் பாதிப்பு

திருநெல்வேலி: நெல்லையில் உள்ள தனியார் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு , அதிக விளக்கு வெளிச்சம் காரணமாக கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று ஆண்டு விழா நடந்தது. விழாவிற்காக சக்தி வாய்ந்த மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆண்டு விழாவில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர். விழா முடிந்த நிலையில், இன்று காலையில் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு கண்ணில் வீக்கம், எரிச்சல் மற்றும் தண்ணீர் வந்துள்ளது. 

இதனையடுத்து, 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற பலரும் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்துள்ளனர். முன்னதாக பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாணவர்களுக்கு லேசான பாதிப்புதான், அதிகளவில் பாதிப்பு இல்லை. இதனால் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.

2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடில்லி: 'தற்போது புழக்கத்தில் இருக்கும், 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த, 2016 நவம்பரில், புழக்கத்தில் இருந்த, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த 2,000 ரூபாய் நோட்டு தொடருமா என்ற கேள்விக்கு, லோக்சபாவில், மத்திய நிதித் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், 'தற்போது புழக்கத்தில் உள்ள, 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு கேள்விக்கு அளித்துள்ள பதிலில், 'புதிதாக, 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது கொச்சி, மைசூரு, ஜெய்ப்பூர், ஷிம்லா மற்றும் புவனேஸ்வரில் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்படும்' என்று, பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Sunday 4 March 2018

ஊழியர்களால் ரூ.2450 கோடியை இழந்த பொதுத்துறை வங்கிகள்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற மோசடி வெளிவந்ததை அடுத்து, பல ஆண்டுகளாக பொதுத்துறை வங்கிகளில் நடைபெற்று வந்த ஏராளமான மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. வங்கி மோசடிகள் குறித்து ரிசர்வ் வங்கி புள்ளி விபரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், 2013 ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2016 ஜூன் வரை வங்கி மோசடி தொடர்பாக 1232 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.2450 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் மோசடியில் ஈடுபட்டதாக வங்கி ஊழியர்கள் மீது அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் ராஜஸ்தான், சண்டிகர், டில்லி, மேற்குவங்கம் மாநிலங்களின் வங்கிகளில் அதிக அளவிலான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது. வெளி ஆட்கள் மட்டுமின்றி வங்கி ஊழியர்கள் அல்லது அதிகாரிகளும் ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேலான தொகையை மோசடி செய்துள்ளனர்.

கிராமங்களில் அதிக அளவிலான வங்கி கிளைகள் அமைக்கப்பட்டுள்ளதே தென் மாநிலங்களில் வங்கி மோசடி அதிகம் நடைபெற காரணம் என கூறப்படுகிறது. அதிகபட்சமாக வங்கி மோசடி தொடர்பாக தமிழகத்தில் 170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாநில வாரியாக மோசடி விபரம் :
தமிழகம் - 170 வழக்குகள் (ரூ.83.09 கோடி)
ஆந்திரா - 157 வழக்குகள் (ரூ.148.41 கோடி)
கர்நாடகா - 125 வழக்குகள் (ரூ.89.34 கோடி)
மகாராஷ்டிரா - 107 வழக்குகள் (ரூ.110.43 கோடி)
கேரளா - 50 வழக்குகள் (ரூ.30.53 கோடி)
ராஜஸ்தான் - 38 வழக்குகள் (ரூ.1096 கோடி)
சண்டிகர் - 3 வழக்குகள் (ரூ.253.44 கோடி)
டில்லி - 37 வழக்குகள் (ரூ.188.22 கோடி)
மேற்கு வங்கம் - 69 வழக்குகள் (ரூ.167 கோடி)
வெளிநாட்டுகிளைகள் - 9 வழக்குகள் (ரூ.41.6 கோடி)
மற்ற 21 மாநிலங்கள் - 467 வழக்குகள் (ரூ.241.53 கோடி)