Search This Blog

Sunday 4 March 2018

ஜெயலலிதா நினைவிடத்தில் துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் அருண்ராஜ் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரையைச் சேர்ந்த அருண்ராஜ், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் இரவுப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். காலை 6 மணியுடன் அவரது பணி முடிவடைய இருந்த நிலையில் அதிகாலை 4.45 மணிக்கு துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அப்போது அங்கு 4 காவலர்கள் பணியில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண்ராஜ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது அவரது உடல் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் ஆணையர் சாரங்கன் உள்ளிட்ட உயரதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாரங்கன், அருண்ராஜின் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும், தற்கொலை செய்து போது அவர் என்ன மனநிலையில் இருந்தார் என்பது உள்ளிட்டவை தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment