Search This Blog

Sunday 4 March 2018

மாணவர்கள் எதிர்கால உறுதிக்கு உதவி மையம்: செங்கோட்டையன்

கோவை:''பள்ளி மாணவர்கள், எதிர்காலத்தில் எந்த கல்வியை தேர்வு செய்வது என்பது உள்ளிட்ட சந்தேகங்களுக்கு தீர்வுகான உதவி மைய எண் வழங்கப்பட்டுள்ளது,'' என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பள்ளி மாணவர்களுக்காக, 24 மணி நேரமும் செயல்படும், 14417 என்ற புதிய உதவி மைய எண் இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையத்தில் இதுவரை, 4,214 மாணவர்கள் தொடர்பு கொண்டு, தங்களுக்கு தேவையான கருத்துக்களை கேட்டறிந்துள்ளனர். அதில், 1,742 பேருக்கு விடையளிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் எந்த கல்வியை கற்றுக்கொள்ளலாம் என்பது உள்ளிட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் விடையளிக்கும் வகையில் உதவி எண் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை சரி செய்வதற்காக, வீட்டிலேயே சென்று மாணவர்களுக்கு, 'கவுன்சிலிங்' வழங்கப்படும்.இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

No comments:

Post a Comment