Search This Blog

Sunday, 4 February 2018

பசுக்களுக்கு ஆதார் அட்டை மத்திய அரசு முடிவு - புகைப்படம், ரேகை ஸ்கேனிங் எல்லாம் உண்டாம்.

முதல்கட்டமாக 50 கோடி செலவில் 4 கோடி பசுக்களுக்கு ஆதார் போன்ற அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு, அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தியாவில் பெரும்பாலும் பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறைகளும், அதனால் உயிரிழப்புகளும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருமளவு ஏற்பட்டது

பசு கடத்தல் காரர்கள், இறைச்சிக்காக கொண்டு செல்கின்றனர் என பசுவின் உரிமையாளர்கள் மற்றும் பசுவை வாங்கி செல்பவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவு காணப்பட்டது. குடிமக்களுக்கு ஆதார் அடையாள அட்டை நலதிட்டங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டது தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை சென்று கொண்டிருந்த போதே பசுக்களுக்கும் இதுபோன்ற அடையாள அட்டை வழங்க பா.ஜனதா அரசுக்கள் தரப்பில் முடிவு எடுக்கப்பட்டது. இந்திய - வங்கதேச எல்லைப் பகுதியில் பசுக்கள் கடத்தப்படுவதை தடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் அகில் பாரத் கிருஷி கோ சேவா சங்கம் என்ற அமைப்பு மனு தாக்கல் செய்தது. 

இதுதொடர்பான விசாரணையின் போது பசு கடத்தலை தடுப்பது தொடர்பாக நிபுணர்கள் குழு அமைத்து பரிந்துரை அறிக்கை சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பசு கடத்தலை தடுக்க, குடிமக்களுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டை போன்று பசுக்களுக்கும் தனித்துவமான அடையாள சான்று வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் நிபுணர்கள் குழு பரிந்துரை செய்தது. இதனைத்தொடர்ந்து தற்போது பசுக்களுக்கு ஆதார் போன்று அடையாள அட்டையை வழங்க அரசு முடிவு செய்து அதற்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 4 கோடி பசுகளுக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பசுக்களிடம் ரேகை எடுத்தல், இனம், வயது, பாலினம், உயரம் மற்றும் சிறப்பு அடையாளங்கள் என பயோமெட்ரிக் வகையில் தகவல்கள் சேகரிக்கப்படும் என்றும் ஒவ்வொரு அட்டைக்கும் ரூ. 8 முதல் ரூ. 10 வரையில் செலவாகும் என அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment