Search This Blog

Monday, 26 February 2018

வாட்ஸ்ஆப், மெசெஞ்சரில் டைப் பண்ணாமலேயே ரிப்ளை; கூகுள் அட்டகாசம்.!

உங்களுக்கு வரக் கூடிய வாட்ஸ்ஆப் மெசேஜ் அல்லது ஃபேஸ்புக் மெசேஜ்-க்கு தானாக பதில் அனுப்பும் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம் இந்த செயலிப் பொறுத்தவரை பல்வேறு மக்களுக்க பயனுள்ள வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது.

தினசரி நாம் அனைவரும் வாட்ஸ்ஆப் மற்றும் ஃபேஸ்புக் போன்ற செயலிகளை ஸ்மார்ட்போன்களில் அதிகநேரம் பயன்படுத்துகிறோம், குறிப்பாக
நன்பர்களுக்கு சாட் செய்ய அதிக நேரம் டைப் செய்ய வேண்டி அவசியமும் உள்ளது. இப்போது வாட்ஸ்ஆப் மற்றும் ஃபேஸ்புக் செயலியில் டைப் செய்யும் நேரத்தை குறைக்கவும், மேலும் நொடியில் சாட் செய்யவும் கூகுள் நிறுவனம் புதிய முயற்சியைக் கொண்டுவந்துள்ளது.
தற்சமயம் கூகுள் நிறுவனம் கூகுள் ரிப்ளை (google reply app) எனும் செயலியைக் கொண்டுவந்துள்ளது. உங்களுக்கு வரும் குருந்தகவல்களுக்கு உடனே பதில் அனுப்பும் பணியை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், ஹேங்அவுட்ஸ் ஸ்கைப் மற்றும் ட்விட்டர் போன்ற செயலிகளில் வரும் குருந்தகவல்களுக்கு உடனே தானாத பதில் அனுப்பும் திறமைக் கொண்டுள்ளது இந்த கூகுள் ரிப்ளை செயலி. கூகுள் ரிப்ளை செயலி பொறுத்தவரை வாடிக்கையாளர் இருக்கும் லொகேஷனை கண்டறிந்து போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப சரியான பதில் அனுப்புகிறது. இத்துடன் வாடிக்கையாளர் பயணம் செய்யும் போக்குவரத்து முறையை கணக்கிட்டு அதற்கேற்ப பதில் அனுப்பும் திறமைக் கொண்டுள்ளது.
இந்த கூகுள் ரிப்ளை செயலி வரும்காலத்தில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி இந்த செயலி வெளவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஜஓஎஸ் இயங்குதளங்களில் இந்த புதிய கூகுள் ரிப்ளை செயலியைப் பயன்படுத்த முடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு நொடியில் சாட் செய்யும் அம்சங்களை கொண்டுள்ளதால் பல்வேறு இளைஞர்களுக்கும் இந்த செயலி பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் ரிப்ளை செயலியை ஏ.பி.கே. மிரர் வலைதளம் மூலம் பதிவிறக்கம் செய்ய முடியும், அல்லது பிளே ஸ்டோரில் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment