இந்திய டெலிகாம் துறையில் - மிகவும் வெளிப்படையாக - நடக்கும் ப்ரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் கட்டண யுத்தங்கள் ஒருபக்கமிருக்க, மறுபக்கம் சத்தமே இல்லமால் அதன் பிராட்பேண்ட் திட்டங்களை விரிவுப்படுத்தி வருகிறது ஆக்ட் பைபர்நெட் நிறுவனம்.
நாட்டில் உள்ள மிகப்பெரிய வயர்டு இணைய சேவை வழங்குநர்களில் ஒன்றான ஆக்ட் பைபர்நெட் நிறுவனமானது அதன் சென்னை மற்றும் பெங்களூரு பகுதியிலுள்ள பிராட்பேண்ட் சந்தாதாரர்களுக்கு நம்பமுடியாதொரு வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த வாய்ப்பை பற்றி அறிந்தபின்னர் நீங்கள் ஆக்ட் பைபர்நெட் சேவைக்கு மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சென்னை
ஆக்ட் பைபர்நெட் நிறுவனமானது அதன் 1500ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவை வாய்ப்பை அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பின் கீழ், சென்னையில் உள்ள ஆக்ட் பைபர்நெட் பிராட்பேண்ட் பயனர்களுக்கு 1500ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவும், பெங்களூரு பயனர்களுக்கு 1000ஜிபி அளவிலான கூடுதல் தரவும் கிடைக்கும்.
வரவு வைக்கப்படும்
இந்த வாய்ப்பை மார்ச் 1, 2018 முதல் ஆகஸ்ட் 31, 2018 வரை பயன்படுத்திக்கொள்ள முடியும். வாய்ப்பின்கீழ் கிடைக்கும் கூடுதலான தரவு நன்மையானது வாடிக்கையாளர் கணக்கீழ் மாதாந்திர அடிப்படையில் வரவு வைக்கப்படும்.
1500ஜிபி
உதாரணமாக, 1500ஜிபி அளவிலான டேட்டாவானது ஆறு மாதங்களாக பிரிக்கப்பட்டு வழங்கப்படும். அதாவது ஒவ்வொரு மாதமும் நிலையான டேட்டா நன்மையுடன் சேர்த்து கூடுதலாக 300ஜிபி அளவிலான டேட்டாவை வாடிக்கையாளர்கள் பெறுவார்கள். இதே போல் பெங்களூருவில் உள்ள பயனாளர்களுக்கும் டேட்டா நன்மை பிரித்து வழங்கப்படும்.
ரூ.999
ஆக்ட் பைபர்நெட்டின் 8 பிராட்பேண்ட் திட்டங்கள் இந்த வாய்ப்பிற்கு செல்லுபடியாகும். முதலாவதாக மாதாந்திர ரூ.999/- மதிப்புள்ள ஆக்ட் பிளேஸ். இது கூடுதலாக 1500ஜிபி உடன் சேர்த்து 75 எம்பிபிஎஸ் வேகத்திலான 200ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். வரம்பிற்கு பின்னர் இணைய வேகமானது 512 கேபிபிஎஸ் ஆக குறையும்.
ரூ.1099/
இரண்டாவது திட்டமான ஆக்ட் ஸ்டார்ம் திட்டத்தின் மதிப்பு ரூ.1099/- ஆகும். இது கூடுதலாக 1500ஜிபி உடன் சேர்த்து 75 எம்பிபிஎஸ் வேகத்திலான 260ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். வரம்பிற்கு பின்னர் இணைய வேகமானது 512 கேபிபிஎஸ் ஆக குறையும்.
ரூ.1299
ரூ.1299
மூன்றாவது திட்டமான ஆக்ட் லைட்னிங் திட்டத்தின் மதிப்பு ரூ.1299/- ஆகும். இது கூடுதலாக 1500ஜிபி உடன் சேர்த்து 90 எம்பிபிஎஸ் வேகத்திலான 350ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். வரம்பிற்கு பின்னர் இணைய வேகமானது 512 கேபிபிஎஸ் ஆக குறையும்.
ரூ.1499/
ரூ.1499/
நான்காவது திட்டமான ஆக்ட் தண்டர் திட்டத்தின் மதிப்பு ரூ.1499/- ஆகும். இது கூடுதலாக 1500ஜிபி உடன் சேர்த்து 100 எம்பிபிஎஸ் வேகத்திலான 450ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். வரம்பிற்கு பின்னர் இணைய வேகமானது 512 கேபிபிஎஸ் ஆக குறையும்.
ரூ.1999
ரூ.1999
ஐந்தாவது திட்டமான ஆக்ட் இங்க்ரிடிப்பில் திட்டத்தின் மதிப்பு ரூ.1999/- ஆகும். இது கூடுதலாக 1500ஜிபி உடன் சேர்த்து 150 எம்பிபிஎஸ் வேகத்திலான 700ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். வரம்பிற்கு பின்னர் இணைய வேகமானது 1 எம்பிபிஎஸ் ஆக குறையும்.
ரூ.2999
ரூ.2999
ஆறாவது திட்டமான ஆக்ட் ஸ்விப்ட் திட்டத்தின் மதிப்பு ரூ.2999/- ஆகும். இது கூடுதலாக 1500ஜிபி உடன் சேர்த்து 150 எம்பிபிஎஸ் வேகத்திலான 900ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். வரம்பிற்கு பின்னர் இணைய வேகமானது 1 எம்பிபிஎஸ் ஆக குறையும்.
ரூ.3999
ரூ.3999
ஏழாவது திட்டமான ஆக்ட் பிளாஷ் திட்டத்தின் மதிப்பு ரூ.3999/- ஆகும். இது கூடுதலாக 1500ஜிபி உடன் சேர்த்து 200 எம்பிபிஎஸ் வேகத்திலான 1100ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். வரம்பிற்கு பின்னர் இணைய வேகமானது 1 எம்பிபிஎஸ் ஆக குறையும்.
ரூ.4999
ரூ.4999
எட்டாவது திட்டமான ஆக்ட் போர்ஸ் திட்டத்தின் மதிப்பு ரூ.4999/- ஆகும். இது கூடுதலாக 1500ஜிபி உடன் சேர்த்து 200 எம்பிபிஎஸ் வேகத்திலான 1400ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். வரம்பிற்கு பின்னர் இணைய வேகமானது 1 எம்பிபிஎஸ் ஆக குறையும்.
No comments:
Post a Comment