Search This Blog

Thursday, 8 February 2018

வாட்ஸ் அப்பில் குரூப் காலிங் வசதி

வாட்ஸ் அப்பில் குரூப் காலிங் வசதி!!!
ஒரு நாளைக்கு சுமார் 100 கோடி பேர் பயன்படுத்தும் வாட்ஸ்அப்பில் குரூப்
காலிங் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ்அப் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தினந்தோறும் புதுப்புது அப்டேட்களை வழங்கி வருகிறது. வாட்ஸ்அப்பில் குரூப் சேட்டிங், எமோஜி வசதி, வாய்ஸ் சேட்டிங் என பல வசதிகள் இன்றைய இளசுகளை கவர்ந்து வருகிறது. அந்த வகையில், வாட்ஸ் அப் நிறுவனம், தற்போது குரூப் காலிங் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது. வாட்ஸ் அப்பில் அப்டேட் செய்துள்ள குரூப் காலிங்கில் மொத்தம் 3 நபர்கள் கலந்துரையாடலாம்.

குரூப் காலிங் வசதிக்கான சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்தச் சோதனை வெற்றி அடைந்து ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் நடைமுறைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment