Search This Blog

Wednesday, 7 February 2018

மல்லையாவிற்கு எவ்வளவு லோன் கொடுக்கப்பட்டது என்றே தெரியாது.. ஆர்டிஐக்கு பதில் சொன்ன மத்திய அரசு

கிங் பிஷர் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா தற்போது லண்டனில் இருக்கிறார். இந்தியாவில் பல வங்கிகளில் இவர் வாங்கிய கடன் இன்னும் திருப்பி அளிக்கப்படவில்லை.

இவரைப் பலமுறை இந்தியாவிற்கு அழைத்து வர முயற்சி செய்தும் முடியவில்லை. இவர் மீது இந்தியாவில் நிறைய வழக்குகள் பதியப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் மல்லையா எவ்வளவு கடன் வாங்கி இருக்கிறார் என்று தெரியவில்லை என நிதி அமைச்சகம்
கூறியுள்ளது. அதுகுறித்த எந்த விவரத்தையும் அளிக்க முடியாது என்றும் கூறியுள்ளது.

காங்கிரஸ் பாஜக

இவருக்கு அதிகமாக லோன் கொடுக்கப்பட்டதில் காங்கிரஸிற்கு முழுப் பங்கு இருக்கிறது என பாஜக தெரிவித்து இருந்தது. சென்ற வருடம் நடந்த கூட்டத்தொடரில் பேசிய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் காங்கிரஸ் மீது குற்றஞ்சாட்டி பேசி இருந்தார். அதே சமயத்தில் மல்லையாவை நாட்டிற்குக் கொண்டு வர பாஜக எந்த முயற்சியும் செய்யவில்லை என்று காங்கிரஸ் பேசி இருந்தது.

இல்லை

மல்லையா எவ்வளவு கடன் வாங்கி இருக்கிறார் என்று ராஜிவ் குமார் கேர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டு இருந்தார். இதற்கு தற்போது பதில் அளித்துள்ள நிதி அமைச்சகம் ''மல்லையா எவ்வளவு லோன் வாங்கி இருக்கிறார் என்றே தெரியவில்லை'' என்று பதில் அளித்துள்ளது.

காரணம் என்ன

இதற்கு மத்திய அரசு காரணமும் சொல்லி இருக்கிறது. அதன்படி மல்லையா பல்வேறு வங்கிகளில் லோன் வாங்கி இருக்கிறார். எந்த லோனுக்கு என்ன உறுதிமொழி கொடுத்துள்ளார் என்று தெரியவில்லை. அதனால் இந்த கேள்வி குறித்து பதில் அளிக்க எங்களால் முடியாது என்றுள்ளார்.

கொடுங்கள்

இந்த விஷயத்தில் மத்திய தகவல் ஆணையம் கண்டிப்பு காட்டியுள்ளது. எப்படி இந்தத் தகவல் இல்லாமல் போனது என்று கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் ஒருவர் பொதுநலன் கருதி தகவல் கேட்கும் போது அதைக் கொடுக்க வேண்டும் என்றும் கண்டிப்புடன் கூறியுள்ளது.

No comments:

Post a Comment