உயர்கல்வி நிறுவனங்களில் முதல் முறையாக, டிஜிட்டல் தொழில்நுட்ப வடிவிலான கல்வி சான்றிதழை மாணவர்களுக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சோதனை முயற்சியாக 2019ம் கல்வியாண்டு முதல் இத்தகைய சான்றிதழை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மும்பை ஐஐடி., டில்லி பல்கலை., கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் வழங்கப்பட உள்ளது.
நிதி ஆயோக்கின் கண்காணிப்பில் பேரில் இந்த சோதனை பணிகள் நடத்தப்பட உள்ளது. இத்தகைய டிஜிட்டல் சான்றிதழ்கள் உறுதித்தன்மை வாய்ந்தாகவும், இந்தியாவை இணைக்கும் சங்கிலியாகவும் இருக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. சோதனை செயல்பாடு வெற்றி பெற்றால், நாடு முழுவதும் டிஜிட்டல் சான்றிதழ் வழங்கும் முறை அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கல்வி நிறுவனங்களுக்கு ஏற்கனவே இமெயில்கள் மூலம் தகவல் அனுப்பப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
கல்வித்துறை ஏற்கனவே டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படுவதால், அதில் இம்முறை அமல்படுத்துவது சிக்கலாக இருக்காது. கல்வி துறையை தொடர்ந்து நில பட்டாக்கள் தொடர்பான ஆவணங்களும் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. பல மாநிலங்கள் இன்னும் டிஜிட்டல் முறைக்கு மாறாமல் இருப்பதால் , இதனை நடைமுறைபடுத்த பல காலம் ஆகும் என்றே கூறப்படுகிறது.
போலிகள் புழக்கம்:
போலி சான்றிதழ்கள் புழக்கத்தில் இருப்பது இந்தியாவின் மிகப் பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 5 மில்லியனுக்கும் அதிகமான போலி சான்றிகழ்கள் பல்வேறு துறைகளில் கண்டுபிடிக்கப்படுகிறது. ரூ.2000 க்கும் குறைவான விலையில் பல்கலை., சான்றிதழ் கிடைப்பதால் போலி சான்றிதழ்கள் அதிகரித்து வருகிறது.
இந்த போலி சான்றிதழ்கள் அளித்து வேலைக்கு சேருவதால் பல நிறுவனங்கள் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றன. இதனை தடுப்பதற்காகவே டிஜிட்டல் முறையில் சான்றிதழ் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
டிஜிட்டல் முறையில் பிளாக்செயின் மூலம் இந்த சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுவதன் மூலம், போலி சான்றிதழ்கள் தடுக்கப்படுவதன் மூலம், சான்றிதழ் சரிபார்ப்பும் ஆப் மூலம் செய்ய முடியும். இந்த டிஜிட்டல் சான்றிதழ்களை எந்த ஒரு தனி நபராலோ மாற்ற இயலாது என்பது இதன் மற்றொரு சிறப்பம்சமாகும்.
இந்த டிஜிட்டல் சான்றிதழ்களைக் கொண்டு வெளிநாடுகளில் வேலைக்கு விண்ணப்பம் செய்வோருக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒப்புதல் பெறுவதும் எளிமையாக்கப்படுகிறது.

No comments:
Post a Comment