Search This Blog

Wednesday, 7 February 2018

விபத்தில் பிரதமர் மோடியின் மனைவி படுகாயம்

பிரதமர் மோடியின் மனைவி யசோதாபென், ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் கோடா - சித்தூர் நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் யசோதாபென் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானது. இதில் அவருடன் வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் காயமடைந்த யசோதாபென் சித்தூர்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

யசோதாபெனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment