சென்னை: நாளை மின்வாரிய அலுவலகங்களில் கட்டணம் செலுத்தும் கவுன்டர்கள் மூடப்படும் என்று மின்வாரிய தொழிற்சங்கங்கள் அறிவித்து இருக்கிறது.
தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால் கடந்த 26 மாதங்களாக ஊதிய உயர்வு வழங்குவது காலதாமதமாகி வருகிறது.

தமிழக மின்வாரிய ஊழியர்கள் சம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்த போவதாக கூறினார்கள். இதற்காக தமிழக அரசு பேச்சு வார்த்தைக்கு ஊழியர்களை அழைத்து இருந்தது. இந்த நிலையில் கடந்த 12ம் இதற்கான பேச்சு வார்த்தை நடந்தது.
அந்த பேச்சு வார்த்தையில் சரியான உடன்பாடு எட்டப்படவில்லை.இதனால் மீண்டும் 15-ம் தேதி இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று சிஐடியு மாநில தலைவர் சுப்பிரமணியன் குறிப்பிட்டு இருந்தார்.இந்த நிலையில் அதன்பின் மின்வாரிய ஊழியர்கள் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்படவில்லை.
இதனால் நாளை மின்வாரிய சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். இந்த நிலையில் ''நாளை எந்த மின்வாரிய அலுவலகத்தில் மின்கட்டணம் செலுத்த முடியாது என்றும் எல்லா அலுவலகத்திலும் மின் கட்டணம் செலுத்தும் கவுன்டர்கள் மூடப்படும் என்றும் சிஐடியூ அறிவித்துள்ளது.
மேலும் நாளைய வேலை நிறுத்தத்தில் 70% ஊழியர்கள் பங்கேற்கிறார்கள். நாளை வேலை நிறுத்தத்தில் ஒருநாள் ஊதியத்தை பிடித்தால் கவலையில்லை என்றும் சிஐடியூ தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment