Search This Blog

Saturday, 3 February 2018

மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறார் பிரதமர் மோடி

மாணவர்கள் தேர்வு சமயங்களில் பதட்டமின்றி செயல்பட்டு வெற்றி எனும் கனியை பறிப்பதற்கான வழிமுறைகள் குறித்து, மாணவர்களிடையே, பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்.
தேர்வு சமயங்களில் மாணவர்களிடையே ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகளினால், அவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாது, அவர்களின் எதிர்காலமே கேள்விக்குரியதாக மாறிவிடுகிறது. மாணவர்கள், அந்த நேரத்தில் எடுக்கும் ஒரு சிறிய முடிவு, அவர்களின் வாழ்க்கையையே திருப்பிப்போடுமளவிற்கு மாற்றத்தை நிகழ்த்திவிடுகிறது. இந்நிலையில், மாணவர்கள் இந்த அசாதாரண சூழ்நிலையை எதிர்கொண்டு தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து தான் எழுதியுள்ள எக்ஸாம் வாரியர்ஸ் ('Exam Warriors') புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்களிடையே உரையாற்ற உள்ளார்.

மாணவர்களிடையே கல்வியின் முக்கியத்துவம், தேர்வு சமயங்களில் பதட்டமில்லாத தன்மை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, பிரதமர் மோடி, தான் எழுதியுள்ள எக்ஸாம் வாரியர்ஸ் புத்தகத்தில் மேற்கோள் காட்டியுள்ளார். பிரதமர் மோடி, இதுவரை (இப்புத்தகத்தையும் சேர்த்து) 5 புத்தகங்கள் எழுதியுள்ளார். பிரதமர் பதவியை தற்போது அலங்கரித்துள்ள மோடி, பிரதமர் பதவிக்காலத்தில் வெளியிடும் முதல் புத்தகம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாக, பிரதமர் மோடி வலியுறுத்துவது இது முதல்முறையல்ல. மாதந்தோறும் ரேடியோவில் பிரதமர் மோடி நிகழ்த்தி வரும் மனதின் குரல் ( Maan ki baat) நிகழ்ச்சியில், கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாக பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

கலந்துரையாடல் :

வரும் பிப்ரவரி மாதம் 16ம் தேதி, டில்லியின் இந்திரா அரினா அல்லது தல்கோட்டரா ஸ்டேடியத்தில், மாணவர்களுடன் சந்திப்புடன் கூடிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்கள் மட்டுமல்லாது, மற்ற தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நிகழ்ச்சியினிடையே, வீடியோ கான்பரன்சிங் மற்றும் சமூக வலைதளங்களின் மூலமாக, மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதோடு மட்டுமல்லாது, அவர்களுடன் கலந்துரையாடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment