Search This Blog

Tuesday, 6 February 2018

ஒன்றரை ஆண்டில் இடிந்து விழும் பள்ளி கட்டடம்!

ராமநாதபுரம் அருகே தினைக்குளம் கிராமத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளிக்கு, நபார்டு திட்டத்தில் 11 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் இரண்டு ஆய்வகங்களுடன் 1.20 கோடி ரூபாயில் கட்டடம் கட்டப்பட்டது. 2016 ஜூலை 18 ல் திறக்கப்பட்டது.

ஒன்றரை ஆண்டுகளுக்குள் படிக்கட்டு உடைந்து தூண்கள் உதிர்கின்றன. இதனால், ஊர் மக்களும்,பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரும் கட்டடத்திற்கு பூட்டு போட்டு மூடினர். ’அருகில் சென்றால் ஆபத்து,’ என எச்சரிக்கை பலகையும் வைத்துஉள்ளனர். மரத்தடியில் வகுப்பு நடந்தது.

இதுகுறித்த பத்திரிகை செய்தியை ஆதாரமாகக் கொண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து வழக்காக எடுத்துள்ளது. கட்டடத்தின் தரம் குறித்து கலெக்டர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பிப்.,8ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள பொதுப்பணித்துறை திட்ட மற்றும் வடிவமைப்பு கண்காணிப்பு பொறியாளர் குமாரிஷீலா நேற்று மதியம் திடீர் ஆய்வு செய்தார். அவருடன் செயற்பொறியாளர் தினகரன், உதவி செயற்பொறியாளர் குருதிவேல், முதன்மை கல்வி அலுவலர் முருகன் உடன் சென்றனர்.
கட்டடத்தை குமாரி ஷீலா ஆய்வு செய்தார். தகவல் அறிந்து பத்தரிகையாளர்கள் அங்கு சென்று போட்டோ எடுத்தனர். இதற்கு எதிர்ப்புதெரிவித்த அவர், வேகமாக, தகவல் எதுவும் கூறாமல் சென்று விட்டார்.

இதுகுறித்து, தினைக்குளம் ஜமாத் செயலாளர் முகமது ரபீக் கூறுகையில், “வெறும் கண் துடைப்பாக நடத்தப்பட்ட ஆய்வு இது. வந்த அதிகாரி யாரிடமும், எதுவும் கேட்கவில்லை. கட்டடத்தில் எந்த பரிசோதனையும் செய்து பார்க்கவில்லை. உயர்நீதி மன்ற மதுரை கிளை இந்த வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும்”, என்றார்

No comments:

Post a Comment