Search This Blog

Thursday, 1 February 2018

10 கோடி மக்களுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு.. மத்திய அரசு அசத்தல்..!

சில வாரங்களுக்கு முன்பு அறிவித்ததைப் போலவே மத்திய அரசு இந்திய மக்களுக்குச் சுமார் 5 லட்சம் ரூபாய்க்கான மருத்துவக் காப்பீட்டு அளிக்க உள்ளதாகப் பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் மூலம் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள பல கோடி குடும்பங்கள் மிகப்பெரிய அளவிலான நன்மையை அடையும். இதேபோன்ற திட்டம் தமிழ் நாட்டிலும் உள்ளது.
இந்தத் திட்டத்திலும் மத்திய அரசுக்கு முன்மாதிரியாக இருப்பது தமிழ்நாடு தான்.

 10 கோடி மக்கள்

NATHEALTH அமைப்புக் கோரிக்கை கையில் எடுத்துள்ள மத்திய அரசு இந்தியாவில் 10 கோடி மக்களுக்கு 5 லட்சம் ரூபாய் அளவிலான மருத்துவக் காப்பீடு அளிக்க உள்ளது.

புள்ளிவிவரம்

இந்திய மக்கள் தொகையில் வெறும் 4 சதவீதம் மக்களுக்கு மட்டுமே தற்போது சுகாதாரக் காப்பீடு உள்ளது. மீதமுள்ள 86 சதவீத மக்கள் மருத்துவச் செலவுகள் மற்றும் இதர சுகாதாரச் சேவைகளுக்குக் கையில் இருக்கும் பணத்தைச் செலவு செய்கின்றனர்

600கோடி ரூபாய்

டிபி நோயாளிகளுக்கான மருத்துவே சேவை மற்றும் மருந்துகளுக்குச் சுமார் 600 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

சுகாதாரக் காப்பீடு

தற்போது வாழ்வியல் முறையில் மக்களுக்குச் சுகாதாரத் துறையின் அவசியம் மற்றும் காப்பீட்டின் அவசியத்தை உணர்த்தும் வகையில் அனைவருக்கும் ஹெல்த் இன்சூர்ன்ஸ் வழங்க வேண்டும் என்ற நோக்குடன் மத்திய அரசு இத்திட்டத்தைத் தற்போது அறிவித்துள்ளது.

மோடி அரசு

பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் மோடி தலைமையிலான அரசு தற்போது 2019ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலின் வெற்றியை மையமாக வைத்து 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தயாரித்து வருகிறது.
இந்நிலையில், ஹெல்த் இன்சூரன்ஸ்-ஐ மையமாக வைத்து மிகப்பெரிய திட்டத்தை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment