Search This Blog

Sunday, 7 January 2018

மஞ்சப்பை... கைலி.... தற்காலிக கண்டக்டராம்...

சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பணி செய்து வருகின்றனர். கைலி அணிந்து மஞ்சள் துணி பையில் டிக்கெட் பணத்தை வசூலிக்கிறார் ஒரு கண்டக்டர். சமூக வலைத்தளங்களில் இந்த காட்சி வைரலாகிறது.

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை சில தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்ததால் பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தம் இன்று 4வது நாளாக தொடர்கிறது.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பஸ் போக்குவரத்தை இயக்க தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தற்காலிக டிரைவர்
காக்கிச்சட்டை, நீலச்சட்டை அணிந்து டிரைவர்கள் பேருந்துகளை இயக்குவார்கள். ஆனால் தற்காலிகாக ஓட்டுநர்கள் ஜீன்ஸ், டி சர்ட் சகிதமாக பஸ்களை ஓட்டுகின்றனர். அதே போல சில கல்வீச்சில் இருந்து தப்பிக்க ஹெல்மெட்டும் அணிந்து கொள்கின்றனர்.

கண்டக்டர்கள்
கண்டக்டர்கள் டிக்கெட் வசூல் பணத்தை மஞ்சள் பையில் வாங்கிப் போட்டதை பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். சிலர் கைலி சகிதமாக களமிறங்கினர்.
அச்சத்துடன் பயணம்
பல புதிய டிரைவர்கள் பஸ் ஓட்டுவதை பார்த்து பயணிகள் அச்சத்துடனேயே பயணித்தனர். சிலரோ நடப்பது நடக்கட்டும் என்று தைரியத்துடன் பயணித்து வருகின்றனர்.

வசூல் போகுமா?
4 நாட்கள் போராட்டத்தினால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இனியும் இந்த போராட்டம் நீடித்தால் ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து கழகம் அதளபாதளத்திற்கு செல்லும் என்பது ஆச்சரியமில்லை.

No comments:

Post a Comment