Search This Blog

Sunday, 7 January 2018

ரிவர்ஸ் எடுக்க தெரியாமல்... ஒரே இடத்தில் ஒரு மணி நேரமாக வட்டமடித்த தற்காலிக டிரைவர்!

திருச்சி: திருச்சியில் பேருந்தை இயக்கிய தற்காலிக ஓட்டுநர் அதை ரிவர்ஸ் எடுக்க முடியாமல் ஒரே இடத்தில் ஒரு மணி நேரமாக வட்டமடித்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 4-ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பேருந்துகள் போதிய அளவில் இயக்காததால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

இனி பேச்சு இல்லை
இதுவரை 23 முறை பேச்சுவார்த்தை நடத்தி விட்ட நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதனால் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

கூவி அழைத்த சம்பவம்
இந்நிலையில் தமிழகம் முழுவதும் தற்காலிக ஓட்டுநர்களும், அண்ணா தொழிற்சங்கத்தினரும் பேருந்துகளை இயக்கி வருகின்றனர். மேலும் சில பணிமனைகளில் டிரைவர்கள் தேவை என கூவி கூவி அழைத்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.

ரிவர்ஸ் எடுக்கத் தெரியாமல்...
திருச்சி மணப்பாறையிலிருந்து கடலூர் செல்லும் பேருந்தை தற்காலிக ஓட்டுநர் இயக்கினார். இந்நிலையில் பேருந்தை ரிவர்ஸ் எடுக்கத் தெரியாமல் திணறிய அவர் ஒரே இடத்தில் ஒரு மணி நேரமாக வட்டமடித்தார்.

உயிருக்கு உத்தரவாதம் இல்லை
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஒரு பேருந்தை ரிவர்ஸ் கூட எடுக்க தெரியாத ஒப்பந்த தொழிலாளர்கள் வைத்து அரசு பேருந்துகளை இயக்குகிறது. இவர்களை நம்பி எதன் அடிப்படையில் நாங்கள் பயணம் செய்வது என்று தெரியவில்லை. உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment