Search This Blog

Monday, 8 January 2018

'நோட்டா ஓட்டு அதிகமானால் மீண்டும் தேர்தல் நடத்தணும்'

புதுடில்லி : ''தேர்தலில், வெற்றி வித்தியாசத்தை விட, 'நோட்டா' ஓட்டுகள் அதிகமாக இருந்தால், மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்,'' என,முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர், டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.
குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில், 5.5 லட்சம் ஓட்டுகள், 'நோட்டா' வுக்கு விழுந்தன. இது, மொத்த ஓட்டுகளில், 1.8 சதவீதம். தேர்தலில் பலரது வெற்றி வித்தியாசம், 'நோட்டா'வுக்கு விழுந்த ஓட்டுகளை விட குறைவாக இருந்தது.
இந்நிலையில், முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர், டி.எஸ்.கிருஷ்ண மூர்த்தி, நிருபர்களிடம் கூறியதாவது:
தேர்தலை பொறுத்தவரை, என் நோக்கில், 'நோட்டா' அம்சம், மிக சிறப்பு வாய்ந்தது. நோட்டாவுக்கு விழும் ஓட்டுகள், வெற்றி பெற்ற வேட்பாளர் பெற்ற கூடுதல் ஓட்டுகளை விட அதிகமாக இருந்தால், மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்; இதை அமல்படுத்த, தக்க சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும்.
இந்த முறை அமலானால், அரசியல் கட்சிகள், நாளடைவில், அப்பழுக்கற்ற வேட்பாளரை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment