Search This Blog

Tuesday, 9 January 2018

'ஆர்.கே.நகர் தோல்விக்கு காரணம்?' முதல்வருக்கு மதுசூதனன் பரபரப்பு கடிதம்

சென்னை: ஆர்.கே.நகரில் அதிமுக தோல்வி குறித்து ஆலோசிக்காதது ஏன் என முதல்வர் பழனிசாமிக்கு அவைத்தலைவர் மதுசூதனன் கடிதம் எழுதியுள்ளார்.

தோல்வி ஏன்?
இது குறித்து கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : ‛‛ ஆர்.கே.நகரில் அதிமுக தோல்வியடைந்தது. இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் இதுவரை ஆலோசிக்காதது ஏன்?, எனது தோல்விக்க யார் காரணம். தோல்விக்கு காரணமான கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? நான் வெற்றி பெற்றிருந்தால் அது கழகத்தின் வெற்றியாக இருக்கும். நான் தோற்றது கழகத்தின் தோல்விதானே?
திமுக தனது தோல்வி குறித்து ஆராய்ந்து தேர்தலில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களை கூண்டோடு நீக்கியுள்ளனர். ஆனால் இப்போது வரை தோல்வி குறித்து அதிமுக எந்த ஆய்வு கூட்டமும் நடத்தவில்லை. எனது கேள்விகள் குறித்து திருப்திகரமான பதில் தரவில்லை எனில் எனது முடிவு தன்னிச்சையாக இருக்கும். '' இவ்வாறு அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கடிதத்தில் முதல்வரிடம் மதுசூதனன் 14 கேள்விகள் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவைத்தலைவர் மதுசூதனனின் இந்த திடீர் கடிதத்தால் அதிமுக தலைமைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment