Search This Blog

Tuesday, 9 January 2018

தியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயமில்லை சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி: சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயம் இல்லை என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோரிக்கை

'இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே தேசப்பற்றை ஏற்படுத்தும் வகையில், நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில், திரைப்படம் துவங்குவதற்கு முன், தேசியகீதம் இசைக்கப்பட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம், கடந்த 2016 நவம்பரில் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், இதுதொடர்பாக, உச்ச நீதி மன்றத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தியேட்டர்களில் தேசியகீதம் இசைக்கப்படுவதை கட்டாயமாக்கியது தொடர்பாக, சில கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. எனவே, இது தொடர்பாக புதிய வழிகாட்டும் விதிமுறைகளை உருவாக்குவதற்காக, அமைச்சரவை குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த குழு, இது தொடர்பாக ஆறு மாதத்துக்குள் புதிய பரிந்துரைகளை அளிக்கும். அதுவரை தியேட்டர்களில் தேசியகீதம் இசைக்கப்படுவதை கட்டாயமாக்கிய உத்தரவை, கோர்ட் திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ரத்து
இதனை ஏற்று கொண்ட கோர்ட், சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை. தேசிய கீதம் இசைக்கப்படும் போது உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும். தேசிய கீதம் குறித்த விதிகளை மத்திய அரசு 6 மாதத்தில் அறிவிக்க வேண்டும் எனக்கூறியுள்ளது.

No comments:

Post a Comment