Search This Blog

Wednesday, 24 January 2018

கட்டண உயர்வு:தலையிட கோர்ட் மறுப்பு

சென்னை : பஸ் கட்டண உயர்விற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞர் ஒருவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், அரசு நிர்வாகத்தில் கோர்ட் எவ்வாறு தலையிட முடியும் என கேள்வி எழுப்பி, இந்த விவகாரத்தில் தலையிட மறுத்து விட்டனர்.

மேலும், அரசு நிர்வாகத்தை கோர்ட் எவ்வாறு நடத்த முடியும். எப்படி பொதுநல வழக்காக தொடர முடியும். பல்வேறு பொருட்களின் விலை உயர்கிறது. ஒவ்வொன்றிலும் கோர்ட் எவ்வாறு தலையிட முடியும். பஸ் கட்டண உயர்வு விவகாரத்தில் கோர்ட் தலையிட முடியாது. பஸ் கட்டணத்தை கோர்ட் தீர்மானிக்க முடியாது என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment