Search This Blog

Wednesday, 24 January 2018

'ஏழைகளின் வங்கி கணக்கிற்கு அபராதம் விதிப்பதில்லை'

ஐதராபாத்: ''வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காமல் உள்ள ஏழைகளுக்கு, வங்கிகள் அபராதம் விதிப்பதில்லை,'' என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் தலைவர், அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்து உள்ளார்.

அவர் கூறியதாவது: பிரதமரின், 'ஜன்தன் யோஜனா' திட்டத்தில், வங்கிக் கணக்கு துவக்கி உள்ளோருக்கு, குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காமல் உள்ளதற்கு, எந்தவித அபராதமும் விதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு, மாதாந்திர சராசரி இருப்பை பராமரிப்பதில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. எஸ்.பி.ஐ.,யில், பி.எஸ்.பி.டி., எனப்படும், அடிப்படை சேமிப்பு கணக்கு, ஏழைகளுக்காகவே உள்ளது. இக்கணக்கில், எவ்விதமான கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

ஒரு வாடிக்கையாளர்,தனக்கு அனைத்து வசதிகளும் உள்ள, முழுமையான சேமிப்பு கணக்கு தேவை இல்லை எனக் கருதினால், அவர், பி.எஸ்.பி.டி., கணக்கிற்கு மாறலாம்.வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காத ஏழைகளுக்கு, வங்கிகள் அபராதம் விதிப்பதாக கூறப்படுவதில் உண்மையில்லை. இது, ஊடகங்கள் கிளப்பி விடும் தேவையற்ற சர்ச்சை. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment