Search This Blog

Wednesday, 3 January 2018

பாக்.,கிற்கு சீனா ‛வக்காலத்து'

பெய்ஜிங்: பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக பாகிஸ்தான் பல தியாகங்கள் செய்துள்ளதாக சீனா கூறியுள்ளது

அதிர்ச்சி
"பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக பாகிஸ்தானுக்கு, கடந்த, 15 ஆண்டுகளில், அமெரிக்க அரசுகள் முட்டாள்தனமாக, 2.10 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவியை அளித்துள்ளன. ஆனால் நடவடிக்கை எடுக்காமல், பொய் சொல்லி, பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வரும் பாகிஸ்தானுக்கு இனி நிதி உதவி கிடையாது," என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். இது பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வக்காலத்து:
இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியதாவது: பயங்கரவாதத்திற்கு எதிராக போரில் பாகிஸ்தான் தீவிரமான நடவடிக்கை எடுத்துள்ளதுடன், தியாகமும் செய்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச போரில், பாகிஸ்தான், மிகப்பெரிய பங்களிப்பையும் கொடுத்துள்ளது. இதனை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும். பரஸ்பர மரியாதை அடிப்படையில், பயங்கரவாதம் உள்ளிட்ட பல பிரச்னைகளில், பாகிஸ்தானின் பங்களிப்பை சீனா மகிழ்ச்சியுடன் பார்க்கிறது. பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கும் தனது பங்களிப்பை அளித்து வருகிறது.சீனாவும் மற்றும் பாகிஸ்தானம் சிறந்த கூட்டாளிகள். இரு தரப்புக்கு பலனளிக்கும் வகையில், அனைத்து துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும், இன்னும் முன்னெடுத்து செல்லவும் நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment