Search This Blog

Wednesday, 3 January 2018

'மாற்று மத திருமணத்திற்கு உதவித்தொகை கிடையாது': மத்திய அரசு

புதுடில்லி : 'ஜாதிகளுக்கு இடையில் கலப்பு மணம் புரிந்தால் வழங்கப்படும் திருமண நிதி உதவி, மதங்களுக்கு இடையில் செய்தால் வழங்கும் திட்டம் ஏதுமில்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய சமூக நீதித் துறை இணையமைச்சர், விஜ்ய சம்ப்லா எழுத்து மூலமாக அளித்துள்ள பதில்: ஜாதி பேதத்தை ஒழிக்கும் வகையில், கலப்பு மணம் புரிவோருக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது. மணம் புரிபவர்களில் ஒருவர், தலித் வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இந்த திருமண உதவியை, 2.5 லட்சம் ரூபாயில் இருந்து உயர்த்தும் திட்டம் ஏதும் தற்போது இல்லை.
அதே போல், மதங்களுக்கு இடையே திருமணம் செய்வோருக்கு, இது போன்ற நிதி உதவி வழங்கும் திட்டமும் ஏதுமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment