Search This Blog

Saturday, 20 January 2018

ஸ்மார்ட் சிட்டி ஆகிறது ஈரோடு

மத்திய அரசின் ஸ்மார்ட் நகரங்கள் பட்டியலில் ஈரோடு உள்ளிட்ட 9 நகரங்கள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளன.

பாஜக அரசின் கனவு திட்டங்களில் ஒன்றாக ஸ்மார்ட் நகரம் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அதிகரித்து நாடெங்கிலும் ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படுகின்றன.
இதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஸ்மார்ட் நகரங்களாக உருவாக்கப்படும் இடங்களைத் தேர்ந்தெடுக்க பல்வேறு கட்டங்களாக தேர்வு நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே நடைபெற்ற தேர்வுகளில் சென்னை உள்ளிட்ட நகரங்கள் ஸ்மார்ட் நகரங்கள் பட்டியலில் இணைந்துள்ளன. இந்நிலையில் 4ம்கட்ட தேர்வில் வெற்றி பெற்ற நகரங்களின் பட்டியலை மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி இன்று வெளியிட்டார். இதில் தமிழகத்தின் ஈரோடு உள்ளிட்ட 9 புதிய நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment