Search This Blog

Saturday, 20 January 2018

விமானம் பறக்கும்போது மொபைலில் பேச டிராய் பரிந்துரை

புதுடில்லி: விமானம் பறக்கும்போது, பயணிகள், மொபைலில் பேசவும், இன்டர்நெட் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கலாம் என, 'டிராய்' எனப்படும், தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

விமான பயணத்தின் போது, மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என்பது விதி. விமானத்தில், பயணம் செய்யும்போதே இன்டர்நெட் மற்றும் அலைபேசியில் பேசும் சேவைகளை பயணிகளுக்கு அறிமுகப்படுத்த இந்திய தொலைத் தொடர்பு துறை, முடிவு செய்தது. இதுகுறித்து, 2017, ஆகஸ்டில், 'டிராய்' அமைப்பிடம் கருத்து கேட்டிருந்தது. இது குறித்து, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், நேற்று கருத்து தெரிவித்தது.

'விமானத்துக்குள் அலைபேசியை பயன்படுத்தும்போது, சர்வதேச விதிகளை பின்பற்ற வேண்டும். இந்திய வான் எல்லையில், 3,000 மீட்டர் உயரத்தில் விமானம் பறக்கும்போது, பயணிகள், இன்டர்நெட் பயன்படுத்தவும், அலைபேசியில் பேசவும் அனுமதி அளிக்கலாம்' என, 'டிராய்' பரிந்துரை செய்துள்ளது.

No comments:

Post a Comment