Search This Blog

Monday, 22 January 2018

பஸ் கட்டணத்தை உயர்த்துவதா? தமிழகம் முழுவதும் கொந்தளித்த மாணவர்கள்

தஞ்சாவூர்: தமிழக அரசு பஸ்கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்து தமிழகத்தில் பல கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் நேற்று பல பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
பேருந்து உயர்வை கண்டித்து அனைத்து கல்லூரி மாணவர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திங்கட்கிழமையன்று யாரும் கல்லூரிக்கு செல்ல வேண்டாம்..கல்லூரி முன் நின்று அமைத்தி போராட்டம் செய்ய வேண்டும். இதனோடு பொது மக்கள் மற்றும் ஆசிரியர்களும் பங்கேற்க்கும் படி கேட்டுக்கொள்கிறோம் என்ற செய்தி வாட்ஸ்அப்பில் பரவியது.


மாணவர்கள் கொந்தளிப்பு

இதனையடுத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். எனினும் கல்லூரிக்கு சென்ற பல மாணவர்கள் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டத்தில் குதித்தனர். திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவிகள் போராட்டம்

இந்தநிலையில் தஞ்சாவூரில் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி முன்பாக அமர்ந்த மாணவிகள், கட்டணம் இருமடங்கானதால் ஊரில் இருந்து கல்லூரிக்கு வர சிரமப்படுவதாக கூறினர். 17 ரூபாய் இருந்த கட்டணம் 35 ரூபாயாக உயர்ந்து விட்டதாகவும், பஸ்பாஸ் கூட நிறுத்தி விடுவார்கள் என்றும் கூறினர்.

அரியலூரில் கொந்தளிப்பு

இதேபோல அருப்புக்கோட்டை கல்லூரி மாணவ, மாணவிகளும் போராட்டத்தில் குதித்தனர். அரியலூரில் 3000 கல்லூரி மாணவர்களும் பஸ் கட்டண உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பஸ் சிறைபிடிப்பு

இதனிடையே பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர் போராட்டம் வெடித்தது. திருப்பூரில் அரசு சிக்கண்ணா கலை கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூரில் தனியார் கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தினர். புதிய பேருந்து நிலையத்தில் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டு புரட்சி

இதேபோல விழுப்புரம் அரசு கலை கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். நாகையில் பாரதிதாசன் உறுப்பு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு இதே நேரத்தில் ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போது பஸ் கட்டண உயர்வுக்காக போராடி வருகின்றனர்.

No comments:

Post a Comment