Search This Blog

Monday, 22 January 2018

பட்ஜெட்டில் மக்களுக்கான சலுகைகள் இல்லை : மோடி சூசகம்

புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் இருக்காது என்று பிரதமர் மோடி சூசகமாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

2018-2019-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்படுமா? என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர் அளித்தபதிலில் : இது நிதி மந்திரியின் அதிகார வரம்புக்கு உட்பட்டவை ஆகும் என்பதால், அதில் நான் தலையிட விரும்பவில்லை. முன்பு குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்த போதும், தற்போது பிரதமராக இருப்பதாலும் நான் சில விஷயங்களை அறிந்து இருக்கிறேன்.

சாமானிய மக்கள் நேர்மையான, திறமையான அரசாங்கத்தைத்தான் விரும்புகிறார்கள். அவர்கள் இலவசங்களையும், சலுகைகளையும் எதிர்பார்க்கவில்லை. சமானிய மக்களின் விருப்பங்களையும், தேவைகளையும் நிறைவேற்றுவதில் எனது அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. இவ்வாறு மோடி கூறினார்.

இதன் மூலம் அடுத்த மாதம் தாக்கலாகவுள்ள பட்ஜெட்டில் மக்களுக்கான சலுகைகள் எதுவும் இருக்காது என பேசப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment