Search This Blog

Monday, 15 January 2018

பாலமேடுவில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடுவில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடந்து முடிந்தது. இன்று ஜன.,15-ம் தேதி பாலமேடு-வில் நடக்க உள்ளது. பாலமேடுவில் நடைபெற உள்ள போட்டி காலை 8 மணிக்கு துவங்க உள்ளது. போட்டியில் 1,080 காளைகளும் , 1,188 மாடு பிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர். 11 மருத்துவ குழுவினர் மாடு வீரர்களையும், 10 கால்நடை மருத்துவ குழுவினர் காளைகளை பரிசோதிக்கின்றனர்.

No comments:

Post a Comment