Search This Blog

Monday, 15 January 2018

காவி வண்ணத்தில் பாஸ்போர்ட்: ராகுல் எதிர்ப்பு

புதுடில்லி: வெளிநாட்டில் குடிபெயர்ந்த இந்தியர்களை மத்திய அரசு இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
பாஸ்போர்ட்டில் கடைசி பக்கத்தில் இருக்கும் இருப்பிட விலாசம் போன்றவற்றை அச்சிடுவதை நிறுத்துவதற்கு, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இ.சி.ஆர்., எனப்படும், குடியுரிமை சோதனை தேவை உள்ளவர்களுக்கு, ஆரஞ்ச் நிறத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட உள்ளதாக சமீபத்தில் வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் குடியேறிய குடிமக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவது ஏற்றுகொள்ள முடியாதது. இது மத்திய பா.ஜ., அரசின் பிரிவினை எண்ணத்தையே காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்

No comments:

Post a Comment