Search This Blog

Thursday, 11 January 2018

பெற்றோர்களே பெரியோர்களே மாணவர்களுக்காக கொஞ்சம் மெனக்கெடுங்க -விழிப்புணர்வு பதிவு

நீட் தேர்வும் நீட்டி நெளியும் உங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோர்களான நீங்கள் கொடுக்க வேண்டிய சப்போர்டுகள் என்ன என்பதை அறிந்து செயல்படுங்கள் பெற்றோர்களே.

ஜனவரியில் இறுதி வாரத்தில் நீட் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளிவர வாய்ப்புள்ளது. மேலும் நடப்பாண்டு முதல் பிளஸ் ஒன் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடக்கவிருக்கின்றது.
தமிழகம் முழுவதும் நீட் ஏற்படுத்திய இழப்புகளும் அதுக்காக தமிழக மாணவர்கள் கொடுத்த விலையையும், நீட் தேர்வால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கனவை நினைவாக்க முடியாமல் தவித்தனர். எத்தனை போராட்டங்கள் எத்தனை சிக்கல்கள் அத்தனையும் மறந்து போகவில்லை அதற்குள் அடுத்த தேர்வுக்கான அறிவிப்பும் வரபோகின்றது.

கடந்த வருடத்தை கடந்துவிடுவோம் இனி நம்மை கடந்து போகும் வருடத்தை கெட்டியாக பிடித்து கொள்வோம். நடப்பு ஆண்டில் நடத்தி காட்டுவோம் நமது தமிழ் நாட்டில் இருந்து தரமான மருத்துவர்களை உருவாக்க மாணவர்களுக்கு இப்போதிருந்தே அதிக கவனம் செலுத்துவோம்.

 பெற்றோர்ளே பெரியோர்களே சீரியலுக்கு லீவு கொடுங்க
வீட்டில் உள்ள பெற்றோர்களே பெரியோர்களே சீரியசா இருக்காதீங்க.. சிரித்த முகத்துடன் இருங்க . உங்கள் பிள்ளைகள் மற்றும் பேரன் பேத்திகளின் கனவுகளுக்காக கொஞ்சம் நாள் டிவி, டிஸ் எல்லாத்துக்கும் முடக்கு போடுங்கள்.
டிவி தவிர்க்க முடியாதது என்றால் உங்கள் வீட்டு பத்து, பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பள்ளி சென்ற நேரம் பாருங்க, நல்ல இசை இருந்தால் தினமும் ஒலி பரப்புங்கள். வீட்டில் மற்ற வயதினருக்கும் பெரியோர்களான நீங்கள்தான் எடுத்த சொல்லி புரிய வைக்கனும்.

பயிற்சி வகுப்பில் கவனம் :
பொது தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக பயிற்சி வகுப்பில் இணைந்து படிக்கும் பொழுதும், பொது தேர்வுக்காக டியூசன் செல்லும்போதும் அவர்கள் அறியா நேரத்தில் அப்பியர் ஆகி கண்காணியுங்கள் அவர்களுக்கு சரியான பயிற்சி கொடுக்கப்படுகின்றதா, எவ்வாறு உங்கள் பிள்ளைகள் பயிற்சி வகுப்பில் எவ்வாறு படிக்கின்றனர்  என்பதை கண்கானியுங்கள்.

தேர்வு காலத்தில் ஆப்செண்ட்டாகி அப்ஸ்காண்டாகுங்கள்:
உங்கள் வீட்டு குழந்தைகளின் தேர்வுகாலம் நெருங்கி கொண்டிருக்கின்றது . அவர்கள் படித்து கொண்டிருக்கும் வேளையில் நீங்கள் அருகில் இருக்க வேண்டியது அவசியம். அவர்கள் என்ன படிக்கின்றார்கள் எவ்வளவு பக்கங்கள் முடித்திருக்கிறார்கள் ஆழப்படிக்கிறார்களா என்பதை அறிந்து கொண்டு அவர்களுக்கு உதவிகரமாக இருங்கள். இந்த தேர்வு நேரத்தில் கமிட்மெண்டுகள் எதுவும் வைக்க வேண்டாம். விழாக்கள், விருந்துகள், கெட்டூ கெதர் அனைத்துக்கும் நோ சொல்லுங்க. இந்த மூன்று மாதம் உங்களுடைய அனைத்து கவனமும் பிள்ளைகளின் மீது இருக்க வேண்டும்.
குடும்ப சிக்கல்களை விவாதங்களை

தவிர்த்துவிடுங்கள்:
நீட் தேர்வு, பொதுத்தேர்வு என உங்க்ள் வீட்டு குழந்தைகள் இருக்கின்ற சூழலில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டிய சூழல் ஆகும். இந்த நேரத்தில் தவிர்க்க முடியாத சூழல் தவிர மற்ற எந்த நேரத்திலும் பிள்ளைகளிடம் குடும்பச் சிக்கல்கள் குறித்து பேச வேண்டாம். அவர்கள் முன் ஆரோக்ய சூழலை மட்டுமே உருவாக்குங்ள் . அவர்களது மனம், உடல் இரண்டும் ஒரு சேர ஒன்றாக தேர்வு காலத்தில் பயணிக்க வேண்டிய நேரம் இது அதனை உணர்ந்து செயல்படுங்கள்.
சோசியல் மீடியாவுக்கு குட்பாய்

சொல்லுங்க:
நம்மால் ஒரு விசயத்தினை தொடர்ந்து கமிட்டாக முடியாத ஒரு சூழல் வரும் அப்பொழுது நாம் சோ சாரி சொல்லி எஸ்கேப் ஆவோம் . இந்த தேர்வு காலத்தில் சோசியல் மீடியாவான பேஸ் புக், வாட்ஸ் அப், இன்ஸ்டா கிராம், செல்பி அனைத்துக்கும் மூன்று மாதத்திற்கு குட் பாய் சொல்லுங்க. பெரியவர்கள் பெற்றோர்களான நீங்கள் எந்த அளவிற்கு பயன்படுத்துவதை குறைக்கின்றிர்க்ளோ அல்லது நிறுத்துகிறிர்களோ அந்த அளவிற்கு உங்கள் பிள்ளைகளும் நிறுத்துவார்கள் அவர்கள் படிக்க இணையம் அதுவும் உங்கள் கண்ட்ரோலில் இருக்க வேண்டும்.

பெற்றோர்களே நட்புடன் பழகுங்கள் நடமாடும் தெய்வங்கள் நீங்கள் என்பதை உணர்ந்து உங்கள் பிள்ளைகளை கவனித்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment