Search This Blog

Saturday, 13 January 2018

பார்வையற்றோர் உலகக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா!

துபாயில் நடந்து வரும் பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்துள்ளது.
துபாயில் பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கி நடந்து வருகிறது. இதில், நேற்று நடந்த லீக் போட்டியில், நடப்பு சாம்பியனான இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது. இதில், கேப்டன் நிசார் அலி மற்றும் ஜமீல் இருவரும் நிலைத்து நின்று ஆடி 3வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்தனர். நிசார் அலி 63 ரன்களிலும், ஜமீல் 94 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து, 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இதில், தீபக் மாலிக் (79 ரன்கள்), வெங்கடேஷ் (64), அஜய் ரெட்டி (47) ஆகியோர் அடுத்தடுத்து அதிரடி காட்ட இந்திய அணி 34.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

No comments:

Post a Comment