Search This Blog

Friday, 26 January 2018

பத்பூஷண் டோணி, பத்மஸ்ரீ ஸ்ரீகாந்த்

டெல்லி: கிரிக்கெட் அணியின் கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணி, பாட்மின்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், பாராலிம்பிக்கில் முதல் பதக்கம் வென்ற முரளிகாந்த் பெட்கர் உள்பட 6 விளையாட்டு வீரர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு துறைகளில் சிறந்த சேவைகள், சாதனைகள் புரிந்தவர்களை கவுரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
டோணிக்கு பத்மபூஷண்
இந்த ஆண்டுக்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் சிவிலியன்களுக்கான மூன்றாவது உயர்ந்த விருதான பத்மபூஷண் விருதுக்கு கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணி, பில்லியர்ட்ஸ் வீரர் பங்கஜ் அத்வானி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நான்கு பேருக்கு பத்மஸ்ரீ
பத்மஸ்ரீ விருதுக்கு, பளுதூக்கும் வீராங்கனை சைக்கம் மிராபி சனு, டென்னிஸ் வீரர் சோம்தேவ் வர்மன், பாராலிம்பிக் வீரர் முரளிகாந்த் பெட்கர், பேட்மின்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தேர்வாகி உள்ளனர்.

கிரிக்கெட்டுக்கு 25 சதவீதம்

கடந்த, 1954 முதல் விளையாட்டு வீரர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இதுவரை, 218 வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 187 பேருக்கு பத்மஸ்ரீ, 27 பேருக்கு பத்மபூஷண், 3 பேருக்கு பத்மவிபூஷண் வழங்கப்பட்டுள்ளது. அதில், 25 சதவீதம் கிரிக்கெட்டுக்கு கிடைத்துள்ளது.

மூன்று விருது பெற்ற சச்சின், ஆனந்த்
நாட்டின் உயர்ந்த விருதான பாரத் ரத்னா, கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டுள்ளது. செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் சச்சின் மட்டுமே மூன்று வகையான விருதுகளைப் பெற்றுள்ளனர்.

கிரிக்கெட்டுக்கே அதிகம்

இதுவரை வழங்கப்பட்டுள்ள, 218 விருதுகளில், மிகவும் அதிகபட்சமாக கிரிக்கெட்டைச் சேர்ந்த 54 பேர் பெற்றுள்ளனர். மலையேறுதலுக்கு 34, ஹாக்கிக்கு 25, தடகளத்துக்கு 23 விருதுகள் கிடைத்துள்ளன. கிரிக்கெட்டில் இதுவரை, 42 பேருக்கு பத்மஸ்ரீ, 10 பேருக்கு பத்மபூஷண், ஒரு பத்மவிபூஷண், ஒரு பாரத ரத்னா கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment