Search This Blog

Wednesday, 31 January 2018

7 லட்சம் அப்ளிகேஷன்களை அதிரடியாக முடக்கிய பிளே ஸ்டோர்.. அதிர வைக்கும் காரணம்!

நியூயார்க்: தற்போது ஆண்ட்ராய்ட் பயன்படுத்தும் அனைவரும் கூகுள் பிளே ஸ்டோர் மூலமாகவே அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்து வருகிறார்கள். இதில் கிடைக்கும் அப்ளிகேஷன்களில் 90 சதவிகிதம் இலவசமாக கிடைக்கிறது.
இது பயன்படுத்த எளிதாக இருப்பதால் உலகம் முழுக்க பலரும் இதை மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். கூகுளுக்கு இதன் காரணமாக மிகவும் அதிகபட்ச வருமானம் கிடைக்கிறது.
தற்போது கூகுளின் பிளே ஸ்டோரில் இருந்து 7 லட்சம் அப்ளிகேஷன்கள் நீக்கப்பட்டு இருக்கிறது.
எடுத்தது
இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுக்க இருக்கும் அனைத்து பகுதிகளில் இருந்தும் இந்த அனைத்து ஆப்களும் நீக்கப்பட்டு இருக்கிறது. இதை டவுன் லோட் செய்வதற்கு முன்பே கூகுள் நீக்கி உள்ளது. டவுன் லோட் செய்யப்பட ஆப்களை செயல் இழக்க வைத்துள்ளது.

எப்படி நீக்கினார்கள்

இதற்காக புதிய தொழில்நுட்பம் ஒன்றை பயன்படுத்துகிறார்கள். கூகுளில் விதிமுறைகளை பின்பற்றாத ஆப்களை இது உடனடியாக கண்டுபிடிக்கும். அதன்முலம் அதை எளிதாக நீக்கிவிடும். 2017ல் இந்த புதிய தொழில்நுட்பம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

காரணம் என்ன

இதில் பல ஆப்கள் பிரபலமான ஆப்களின் போலி ஆகும். மேலும் சில மொபைலை பாதிக்க கூடிய வகையில் இருந்துள்ளது. இன்னும் சில ஆப்கள் பயனாளர்களின் தகவல்களை திருடும் வகையில் இருந்துள்ளது.

மென்பொறியாளர்கள்

அதேபோல் 1 லட்சம் ஆப் டெவலப்பர்கள் இதன் மூலம் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் இமெயில் மூலம் ஏற்றப்படும் எந்த ஆப்களும் இனி கூகுளில் இடம்பெற முடியாது. அவர்கள் வேறு இமெயில் மூலம் வருவதை தடுக்கவும் வழிகள் யோசிக்கப்ட்டு வருவதாக கூறப்பட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment