Search This Blog

Friday, 29 December 2017

MLA வை அறைந்த போலீஸ்

தன்னை அறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை திருப்பி அறைந்த பெண் போலீஸ்
சிம்லா: ஹிமாச்சல் தோல்விக்கு காரணம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது பெண் எம்எல்ஏ ஆஷா குமாரியை போலீஸார் அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த எம்எல்ஏ, பெண் போலீஸின் கன்னத்தில் அறைந்தார். பதிலுக்கு போலீஸும் எம்எல்ஏ கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹிமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. தோல்விக்கான காரணம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கங்ரா, ஹமீர்பூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர்கள் முதல் பகுதியாகவும், மாண்டி, சிம்லா நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர்கள் இரண்டாம் பகுதியாகவும் ராகுல்காந்தியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அப்போது ராகுலை பார்க்க அங்கு தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அச்சமயம் காங்கிரஸ் பெண் எம்எல்ஏ ஆஷா குமாரி அந்த இடத்துக்கு வருகை தந்தார்.
அவரை பெண் போலீஸ் ஒருவர் அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆஷா குமாரி பெண் போலீஸின் கன்னத்தில் அறைந்தார். உடனே சற்றும் தாமதிக்காமல் அந்த பெண் போலீஸ், எம்எல்ஏவை ஓங்கி அறை விட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment