Search This Blog

Monday, 1 January 2018

சமோசா விற்க கூகிள் வேலையை விடலாமா.. அதிரடி முடிவின் விளைவு மிகப்பெரிய வெற்றி..!

இன்றைய இளைஞர்கள் பெரிய நிறுவனங்களில் வேலை, அதிகம் சம்பளம் ஆகியவற்றை விடத் தனது கனவுகளை அடையவேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளனர். அது சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி.
இதில் என்ன விஷயம் என்றால் அவர்கள் இதில் வெற்றிபெறுவது மட்டும் அல்லாமல் 10 வருடத்தில் அடையே வேண்டிய வளர்ச்சி, பெற வேண்டிய பேர், புகழ் அனைத்தையும் ஒரு சில வருடங்களில் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்கின்றனர்.
இதில் முனாப் காபாடியா-வும் ஒருவர்.

முனாப் கபாடியா
இந்தியாவில் பல மொழிகள் பல கலாச்சாரம் இருப்பதைப் போல் உணவிலும் பல வகைகள் உண்டு. இப்படி நாட்டில் இருக்கும் அனைத்தும் உணவுகளும் ஓரே ஊரில் கிடைக்கும் இடங்கள் சில மட்டுமே தான். அதில் மும்பை முக்கியமான ஒன்று.
தற்போது ஒட்டுமொத்த மும்பையைக் கலக்கி வரும் உணவு ஸ்டார்ட்அப் நிறுவனம் தான் போஹ்ரி கிட்சென். இதன் உரிமையாளர் தான் முனாப் கபாடியா.
கூகிள் முதல் சமோசா வரை...
2015ஆம் ஆண்டு முனாப் கபாடியா எம்பிஏ படித்து முடித்துவிட்டு கூகிள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது தாய் நபிசா அவர்களை டிவி முன் தினசரி பார்ப்பதைத் தவிர்க வேண்டும் எனத் திட்டமிட்டு புதிய புட் பிராஜெக்ட்-ஐ தயாரித்தார்.
கபாடியாக்கள், போஹ்ரி சமூகத்தைச் சார்ந்தவர்கள், இவர்கள் பொதுவாக எச்சில் ஊறும் தின்பண்டங்களைச் செய்வதில் பிரபலமானவர்கள். இதில் முனாப் கபாடியா-வின் தாயார் நபிசா கைதேர்ந்தவர்.
அம்மா கையால் செய்த உணவு..
தனது உறவினர்கள் மத்தியில் நபிசா உணவு மிகவும் விரும்பத்தக்க ஒன்றாக இருந்த நிலையில், இதனை வெளியுலகத்திற்கும் கொண்டு செல்ல முடிவு செய்தார் முனாப்.
சோதனை
முதலில் இந்த முயற்சியை நேரடியாகச் சந்தைக்குக் கொண்டு செல்வதை விட அதனை முறையாகச் சோதனை செய்து பார்க்க முடிவு செய்தார் முனாப்.
இதன் படி தனது தெரிந்த வெளிநபர்களை இரவு உணவிற்காக அழைத்தார். அப்போது தனது தாய் சமைத்த உணவை அனைவருக்கும் அளித்து அதன் ருசி, மக்கள் கருத்து, சந்தையில் இதன் வெற்றி வாய்ப்பு ஆகியவற்றைத் துல்லியமாக்க கணித்தார்.
பெண்களும்.. உணவு...
அடுத்தக் கட்டமாக அறிமுகம் இல்லாதவர்களைத் தனது தாயின் உணவை ருரி பார்க்க வைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு இணையத்தில் Word of Mouth என்ற பிரச்சாரத்தின் மூலம் சில பெண்கள் குழுக்களைச் சாப்பிடத் தனது வீட்டிற்கு அழைத்தார். இதற்கு அவர் நிர்ணயம் செய்த கட்டணம் ஒரு நபருக்கு 700 ரூபாய்.
இதின் பின்னரே தனது பிராஜெக்ட்-க்கு போஹ்ரி கிட்சென் எனப் பெயர் வைத்தார்.
கூகிள் வேலை...
உடனே பேஸ்புக்-இல் போஹ்ரி கிட்சென் என்ற பக்கத்தைத் திறந்தார். இதன் பின் தனது தாயைவிடவும் முனாப் மிகவும் பிசியாக இருந்தார்.
தனது கனவிற்கும் திட்டத்திற்கும் வேலை ஒரு தடையாக இருக்கும் காரணத்தால், கூகிள் போன்ற பெரிய நிறுவனத்தில் வேலை செய்தாலும் அதனை விட்டுவிட்டு உணவு சந்தையில் புதிய புரட்சியைச் செய்யக் களமிறங்கினார்.
ஒவர் நைட்-இல் ஒபாமா...
இன்றைய நிலையில் இந்த உணவை நீங்கள் ருசிக்க ஆசைப்பட்டால், அதற்கு மூனாப்-ஐ உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் இல்லையெனில் அவரின் நண்பர்களை யாரையாவது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்படி இல்லையாக நாட்டின் பிரதமராக இருக்க வேண்டும் அந்த அளவிற்கு இவர் தற்போது மும்பையிலே பேமஸ்.
பிரபலங்கள்
தற்போது இவர் வீட்டு உணவகத்தில் பல பாலிவுட் பிரபலங்கள் வந்த சாப்பிட்டுள்ள காரணத்தால், இந்திய மீடியா மட்டும் அல்லாமல் உலக மீடியாக்களிலும் இவர் இடம்பிடித்துள்ளார்.
மேலும் உணவு சந்தையில் இருக்கும் பல இவர் வெற்றியின் ரகசியத்தைத் தெரிந்துகொள்ள மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment